என்.ஆர்.சி. கொண்டு வந்தாலும் ஒரு கூர்க்கா கூட வெளியேற்றப்படமாட்டார்.. அமித் ஷா உறுதி

என்.ஆர்.சி. கொண்டு வந்தாலும் ஒரு கூர்க்கா கூட வெளியேற்றப்படமாட்டார்.. அமித் ஷா உறுதி

மேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) கொண்டு வரப்பட்டாலும் ஒரு கூர்க்கா கூட வெளியேற்றப்படமாட்டார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் கூர்க்கா சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் கலிம்பொங் மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் நடந்த ஊர்வலம் பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப்பட்டால் கூர்க்காக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற தவறான தகவல் பரப்பப்படுகிறது. என்.ஆர்.சி. இன்னும் கொண்டு வரப்படவில்லை.

என்.ஆர்.சி. கொண்டு வந்தாலும் ஒரு கூர்க்கா கூட வெளியேற்றப்படமாட்டார்.. அமித் ஷா உறுதி
தேசிய குடிமக்கள் பதிவேடு

ஆனால் ஒரு வேளை அது (என்.ஆர்.சி.) கொண்டு வரப்பட்டாலும் ஒரு கூர்க்கா கூட வெளியேற்றப்பட மாட்டார்கள். திரிணாமுல் காங்கிரஸ் பொய் சொல்கிறது. ஒரு கூர்கா கூட பாதிக்கப்பட மாட்டார். கலிம்பொங் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது. 1986ல் சி.பி.எம். இங்கு உள்ள மக்களை ஒடுக்கியது, 1,200க்கும் மேற்பட்ட கூர்க்காக்கள் தங்களது உயிரை இழந்தார்கள். உங்களுக்கு நீதி வழங்கப்படவில்லை.

என்.ஆர்.சி. கொண்டு வந்தாலும் ஒரு கூர்க்கா கூட வெளியேற்றப்படமாட்டார்.. அமித் ஷா உறுதி
மம்தா பானர்ஜி

சகோதரி ஆட்சிக்கு வந்தபோது, அவர் பல கூர்க்காக்களின் உயிரை பறித்தார். உங்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. தாமரை அரசாங்கத்தை தேர்வு செய்யுங்க, நாங்கள் சிறப்பு விசாரணை குழுவை அமைப்போம், அவர்களை கம்பிகளுக்கு பின்னால் (சிறை) அனுப்புவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். அமித் ஷா அந்த பேரணியில் கூர்க்காக்களின் பாரம்பரியமான தொப்பி மற்றும் மப்லர் அணிந்து இருந்தார்.