மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா!

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 532 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 819 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 74,590 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 57 ஆயிரத்து 725 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரத்து 496 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா!

இந்த நிலையில், முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எடியூரப்பா, “எனக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தற்போது நலமுடன் உள்ளேன். டாக்டர்களின் அறிவுரையின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் சுய தனிமைப்படுத்தலை பின்பற்றிக் கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.

இதனிடையே, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.