இந்தியாவில் இரண்டாவது அலை முடிந்து விட்டதா? – மத்திய சுகாதாரத்துறை விளக்கம்!

 

இந்தியாவில் இரண்டாவது அலை முடிந்து விட்டதா? – மத்திய சுகாதாரத்துறை விளக்கம்!

இந்தியாவில் கொரோனா 2வது அலையின் உயர்வு இன்னும் முடிவுக்கு வரவில்லை என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிவிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43,263 பேருக்கு கொரோனா உறுதியானதாக தெரிவித்திருந்தது. கடந்த 24 மணிநேரத்தில் 338 பேர் பலியானதாகவும் 40,567 பேர் குணமடைந்ததாகவும் 3,91,256 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தது.

இந்தியாவில் இரண்டாவது அலை முடிந்து விட்டதா? – மத்திய சுகாதாரத்துறை விளக்கம்!

நேற்று முன்தினம் 32 ஆயிரம், நேற்று 37 ஆயிரமாக பதிவான கொரோனா பாதிப்பு இன்று 43 ஆயிரமாக அதிகரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மூன்றாவது அலை தொடங்கி விட்டதா என்றெல்லாம் கேள்விகள் எழத் தொடங்கின. பாதிப்பு குறைவது போல குறைந்து மீண்டும் அதிகரித்து மூன்றாவது அலை உருவாகும் என வல்லுநர்கள் தெரிவித்ததைப் போலவே தற்போது நடந்துக் கொண்டிருப்பதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இந்தியாவில் இரண்டாவது அலை முடிந்து விட்டதா? – மத்திய சுகாதாரத்துறை விளக்கம்!

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உயர்வு இன்னும் முடிவுக்கு வரவில்லை என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் உள்ள 30 மாவட்டங்களில் நோய் பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 43 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் மட்டும் 32 ஆயிரம் பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று தெரிவித்துள்ளார்.