ஏப்ரல் 11ம் தேதி வரை 44 லட்சம் கோவிட் தடுப்பூசி டோஸ் வேஸ்ட்.. கேரளா, மேற்கு வங்கம் ஒரு டோஸ் கூட வீணாக்கவில்லை..

ஏப்ரல் 11ம் தேதி வரை 44 லட்சம் கோவிட் தடுப்பூசி டோஸ் வேஸ்ட்.. கேரளா, மேற்கு வங்கம் ஒரு டோஸ் கூட வீணாக்கவில்லை..

ஏப்ரல் 11ம் தேதி வரை மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளில் 44 லட்சம் தடுப்பூசி டோஸ்களை மாநில அரசுகள் வீணடித்துள்ளன. அதேசமயம் கேரளா,மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் ஒரு டோஸ் தடுப்பூசியை கூட வீணாக்கவில்லை என தெரியவந்துள்ளது.

விவேக் பாண்டே என்பவர் தகவல்அறியும் உரிமை சட்டத்தின்கீழ், கொரோனா தடுப்பூசி விநியோகம் மற்றும் தடுப்பூசி வீணானது தொடர்பாக தகவல் கேட்டு இருந்தார். இதற்கு மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள பதிலில், இந்த ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி வரை பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 10.34 கோடி தடுப்பூசி டோஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 44.78 லட்சம் டோஸ் தடுப்பூசி வீணாகியுள்ளது. தமிழ்நாடு அதிகளவில் தடுப்பூசியை (100 தடுப்பூசி டோஸ்களில் 12 டோஸ் வேஸ்ட்) வீணடித்துள்ளது.

ஏப்ரல் 11ம் தேதி வரை 44 லட்சம் கோவிட் தடுப்பூசி டோஸ் வேஸ்ட்.. கேரளா, மேற்கு வங்கம் ஒரு டோஸ் கூட வீணாக்கவில்லை..

அடுத்ததாக ஹரியானா (100 டோஸ்களில் 9), பஞ்சாப், மணிப்பூர் மற்றும் தெலங்கானா (100 டோஸ்களில் 8 வேஸ்ட்) ஆகிய மாநிலங்கள் அதிகளவில் தடுப்பூசிகளை வீணடித்துள்ளன. அதேசமயம், கேரளா, மேற்கு வங்கம், இமாச்சல பிரதேசம், மிசோரம், கோவா, தமன் மற்றும் டி.யு., அந்தமான் நிக்கோபர் தீவு மற்றும் லட்சத்தீவு ஆகியவை ஜீரோ சதவீதம் தடுப்பூசி வேஸ்ட் காட்டியுள்ளன.

ஏப்ரல் 11ம் தேதி வரை 44 லட்சம் கோவிட் தடுப்பூசி டோஸ் வேஸ்ட்.. கேரளா, மேற்கு வங்கம் ஒரு டோஸ் கூட வீணாக்கவில்லை..
கொரோனா தடுப்பூசி

அதேசமயம் தடுப்பூசி செலுத்திய மாநிலங்களில் மகாராஷ்டிராவில் 95 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலன் அடைந்துள்ளனர். ஆனால் 6 சதவீதம் மட்டுமே தடுப்பூசி வீணாகியுள்ளது. குஜராத்தில் 90 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இருப்பினும் அம்மாநிலத்தில் 3.8 சதவீத தடுப்பூசிகளே வீணாகி உள்ளது. 89 லட்சத்துக்கும் மேற்பட்ட உத்தர பிரதேசவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர் ஆனால் அம்மாநிலத்தில் 5 சதவீத அளவுக்கே தடுப்பூசி வீணாகியுள்ளது.