குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டாம் : சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு!

 

குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டாம் : சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. நாளொன்றுக்கு 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறிய சூழல் நிலவியது. அதிக பணிச் சுமையால் மருத்துவர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்த நிலையும் ஏற்பட்டது. இதுமட்டுமில்லாமல், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் உயிரிழக்க நேர்ந்தது.

குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டாம் : சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு!

இவ்வாறு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இரண்டாம் அலையிலிருந்து இந்தியா மீண்டு வருகிறது. பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து மூன்று நாட்களாக ஒரு லட்சத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்தாலும் மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் மக்கள் மத்தியில் அச்சம் நீடிக்கிறது. மூன்றாவது அலை குழந்தைகளை அதிகமாக பாதிக்க கூடும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டாம் : சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு!

இந்த நிலையில், 5 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 18 வயதுக்கு உட்பட்டோருக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள சுகாதார சேவைகள் இயக்குநரகம், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மாஸ்க் அணிய தேவையில்லை. 6 முதல் 11 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற்றோர்களின் கண்காணிப்பிலும் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரிலும் மாஸ்க் அணியலாம். 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படவில்லை. தேவைப்பட்டால் எச்ஆர் சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.