அரசியலுக்காக கோவிட் தடுப்பூசி தொடர்பாக சிலர் தவறான தகவல்களை பரப்புகிறார்கள்… மத்திய அமைச்சர் வேதனை

அரசியலுக்காக கோவிட் தடுப்பூசி தொடர்பாக சிலர் தவறான தகவல்களை பரப்புகிறார்கள்… மத்திய அமைச்சர் வேதனை

அரசியல் காரணங்களுக்காக கோவிட் தடுப்பூசி தொடர்பாக சிலர் தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்று கட்சியை மத்திய அமைச்சர் ஹா்ஷ் வர்தன் தெரிவித்தார்.

நாடு முழுவதுமாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமையன்று தொடங்கி வைத்தார். அன்று மட்டும் மொத்தம் 3,006 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது. ஒவ்வொரு மையத்திலும் தலா 100 பேர் வீதம் மொத்தம் 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் 2 பேர் அடுத்த சில தினங்களில் இறந்து விட்டனர். ஆனால் அவர்கள் இறப்புக்கு தடுப்பூசி காரணம் கிடையாது. மாரடைப்பு போன்ற காரணங்களால் அவர்கள் உயிர் இழந்தனர். அதேசமயம் சிலருக்கு அலர்ஜி ஏற்பட்டதாக தெரிகிறது.

அரசியலுக்காக கோவிட் தடுப்பூசி தொடர்பாக சிலர் தவறான தகவல்களை பரப்புகிறார்கள்… மத்திய அமைச்சர் வேதனை
ஹர்ஷ் வர்தன்

இதனையடுத்து கொரோனா தடுப்பூசி தொடர்பாக சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது: அரசியல் காரணங்களுக்காக சில தடுப்பூசி தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவது துரதிருஷ்டவசமானது. கோவிட்-19ன் சவப்பெட்டியில் தடுப்பூசி கடைசி ஆணியாக இருக்கும்.

அரசியலுக்காக கோவிட் தடுப்பூசி தொடர்பாக சிலர் தவறான தகவல்களை பரப்புகிறார்கள்… மத்திய அமைச்சர் வேதனை
கோவிட்-19 தடுப்பூசி மருந்து

தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்ற செய்தி தெளிவாக உள்ளது. கூறப்பட்ட பாதகமான நிகழ்வுகள் அல்லது பக்க விளைவுகள் தோன்றுவது பொதுவானது, எந்தவொரு தடுப்பூசி போட்ட பிறகும் இதை காணலாம். தடுப்பூசி எடுக்க தயங்கும் மக்கள் எந்தவொரு குறைபாட்டையும் சந்திக்க அரசாங்கம் விரும்பவில்லை. எங்கள் மருத்துவர்களை போலவே அனைவருக்கும் சமமான பாதுகாப்பு கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.