அசுர வேகத்தில் பரவும் கொரோனா… தீவிர ஆலோசனையில் மத்திய அரசு!

 

அசுர வேகத்தில் பரவும் கொரோனா… தீவிர ஆலோசனையில் மத்திய அரசு!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவாக நாளொன்றுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியாகிறது. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளும் ஆயிரத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2.17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 1185 பேர் உயிரிழந்துள்ளனர்.

அசுர வேகத்தில் பரவும் கொரோனா… தீவிர ஆலோசனையில் மத்திய அரசு!

குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட நாடுகளே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அம்மாநிலங்களில் மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க இடமில்லாமல் மருத்துவமனை வாயில்களில் நூற்றுக் கணக்கான நோயாளிகள் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியாமலும் உறவினர்கள் திண்டாடி வருகிறார்கள். முதல் அலையை விட பன்மடங்கு அதிகமாக பரவும், கொரோனா இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது.

அசுர வேகத்தில் பரவும் கொரோனா… தீவிர ஆலோசனையில் மத்திய அரசு!

இந்த நிலையில், கொரோனா அதிகரிப்பு தொடர்பாக மத்திய அரசு நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் நாளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். அண்மையில் அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்ட பிரதமர் மோடி, தடுப்பூசி திருவிழா நடத்துமாறும் அறிவுறுத்தினார். அதனை மாநில அரசுகள் செயல்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஹர்ஷ்வர்தன் மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளார். இக்கூட்டத்தின் முடிவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.