நெருங்கும் பண்டிகை காலம்… மூக்குக்கு மேலே மாஸ்க் போட மறக்காதீங்க… எச்சரிக்கும் மத்திய அமைச்சர்..

நெருங்கும் பண்டிகை காலம்… மூக்குக்கு மேலே மாஸ்க் போட மறக்காதீங்க… எச்சரிக்கும் மத்திய அமைச்சர்..

பண்டிகை காலம் நெருங்கி வருவதால், மூக்குக்கு மேலே மாஸ்க் போடா மறக்காதீங்க என்று மக்களை மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் எச்சரிக்கை செய்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக நம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில், தற்போது பண்டிகை காலம் தொடங்க உள்ளது. பொதுவாக பண்டிகை காலங்களில் கடை வீதிகளில் கூட்டம் அலைமோதும். முன்பு போல் மக்கள் சாதரணமாக கடைவீதிகளுக்கு சென்றால் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அபாயங்கள் உள்ளது. இதனால் மக்கள் மாஸ்க் அணிய மறக்கக்கூடாது என்று மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவுறுத்தியுள்ளார்.

நெருங்கும் பண்டிகை காலம்… மூக்குக்கு மேலே மாஸ்க் போட மறக்காதீங்க… எச்சரிக்கும் மத்திய அமைச்சர்..
ஹர்ஷ் வர்தன்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இது தொடர்பாக கூறியதாவது: பண்டிகை காலம் நெருங்குவதால், கோவிட்-19க்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பத்தில் நாம் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். உங்க மாஸ்க்குகளை உங்கள் மூக்குக்கு மேலே அணிய மறக்காதீர்கள், அடிக்கடி சுத்திகரிங்க, கைகளை கழுவுங்க, சமூக இடைவெளியை கடைபிடியுங்க. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நெருங்கும் பண்டிகை காலம்… மூக்குக்கு மேலே மாஸ்க் போட மறக்காதீங்க… எச்சரிக்கும் மத்திய அமைச்சர்..
கடை வீதி

நம் நாட்டில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 லட்சத்தை தாண்டி விட்டது. மேலும், கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1.05 லட்சத்தை கடந்து விட்டது.