உலக சுகாதார நிறுவன நிர்வாக குழு தலைவராக பொறுப்பேற்றார் ஹர்ஷவர்தன்

 

உலக சுகாதார நிறுவன நிர்வாக குழு தலைவராக பொறுப்பேற்றார் ஹர்ஷவர்தன்

மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன்,உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக குழு தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழுவில் மொத்தம் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதற்கு முன்பு அந்த குழு தலைவராக ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹிரோகி நகாடானி பதவி வகித்து வருகிறார். இவரது பதவி காலம் நிறைவடைந்ததையொட்டி, இந்த குழுவின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக நடந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

உலக சுகாதார நிறுவன நிர்வாக குழு தலைவராக பொறுப்பேற்றார் ஹர்ஷவர்தன்

உலகம் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும் வேளையில் உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக குழு தலைவர் பொறுப்பை இந்தியா ஏற்று கொண்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 34 உறுப்பினர்களை கொண்ட நிர்வாக குழுவின் தலைவராக அமைச்சர் ஹர்ஷவர்தன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதுகுறித்து பேசிய அமைச்சர் ஹர்ஷவர்தன், “ஒரு பெருந்தொற்றை உலகம் எதிர்கொண்டிருக்கும் வேளையில் நான் இந்த பொறுப்பை ஏற்றுள்ளேன், இந்த சவாலை அனைவரும் இணைந்து எதிர்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் முடிவுகள் மற்றும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துதல் ஆலோசனை வழங்குதல் உள்ளிட்டவை நிர்வாக குழுவின் செயல்பாடுகளாக இருக்கும்” என தெரிவித்தார்.