மீண்டும் தீவிர ஊரடங்கு : மத்திய அரசு எச்சரிக்கை!

 

மீண்டும் தீவிர ஊரடங்கு : மத்திய அரசு எச்சரிக்கை!

கொரோனா தடுப்பு நடவடிக்கையை மக்கள் பின்பற்றாவிடில் மீண்டும் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவையே புரட்டி போட்ட கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு இந்தியா இயல்பு நிலைக்கு திரும்பியது. அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். பல இடங்களில் சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டு விட்டதால், கோடைக்காலத்தில் கண்டுகளிக்க வேண்டிய இயற்கையின் எழிலை மக்கள் இப்போது கண்டு களிக்கிறார்கள்.

மீண்டும் தீவிர ஊரடங்கு : மத்திய அரசு எச்சரிக்கை!

இயல்பு நிலை திரும்பியிருப்பது நல்ல விஷயம் தான் என்றாலும், மக்கள் மத்தியில் மூன்றாவது அலை குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை. முதல் அலைக்கு பிறகு செய்த தவறை மீண்டும் செய்கிறார்கள். மாஸ்க் அணியாமல் செல்வது, சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பது என டெல்டா கொரோனாவின் தீவிரத்தை உணராமல் சுற்றித் திரிகிறார்கள். இந்த நிலையில், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாவிடில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமென மத்திய சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மீண்டும் தீவிர ஊரடங்கு : மத்திய அரசு எச்சரிக்கை!

இது குறித்து பேசிய அவர், அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் நாட்டில் 24% பேர் முகக் கவசம் அணிவது இல்லை என தெரிய வந்துள்ளது. 45% பேர் முறையாக முகக்கவசம் அணிவதில்லை. 63% பேர் தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதில்லை. 25% பேர் பயணங்களின்போது கொரோனா தடுப்பு வழிகளை பின்பற்றுவது இல்லை. மக்கள் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லையெனில் ஊரடங்கு அமல்படுத்த நேரிடும் என்று கூறியுள்ளார். சிம்லா, மணாலி போன்ற மலைப் பிரதேசங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது சுட்டிக்காட்டி சுகாதாரத்துறை செயலாளர் வேதனை தெரிவித்துள்ளார்.