சமூகவலைதள கணக்குகளை அடையாள அட்டையுடன் இணைக்கும் திட்டம் இல்லை – மத்திய அரசு

 

சமூகவலைதள கணக்குகளை அடையாள அட்டையுடன் இணைக்கும் திட்டம் இல்லை – மத்திய அரசு

இந்தியா முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கோடிக் கணக்கான மக்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகிறார்கள். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூ டியூப் என பல சமூக வலைதள பக்கங்களை மக்கள் உபயோகப்படுத்துகிறார்கள். சமூக வலைத்தளங்களில் ஒரு புதிய கணக்கை தொடங்க செல்போன் எண் அல்லது இ – மெயில் ஐடி மட்டுமே போதுமானது.

சமூகவலைதள கணக்குகளை அடையாள அட்டையுடன் இணைக்கும் திட்டம் இல்லை – மத்திய அரசு

ஆனால், இனி வரும் காலங்களில் புதிய கணக்கை தொடங்க அரசு அடையாள அட்டை அவசியம் என்று தகவல்கள் கசிந்தன. அதாவது, சமூக வலைதள கணக்குகளை அடையாள அட்டையுடன் இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

சமூக வலைதள கணக்குகளை அரசு அடையாள அட்டையுடன் இணைக்கும் திட்டம் இல்லை என்றும் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புதிய கணக்கை தொடங்க அரசின் அடையாள அட்டையை இணைக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.