ஓபிசி பட்டியலில் திருநங்கைகள்; மத்திய அரசின் அதிரடி முடிவு!

 

ஓபிசி பட்டியலில் திருநங்கைகள்; மத்திய அரசின் அதிரடி முடிவு!

இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மூன்றாம் பாலினத்தவர்களையும் சேர்க்க மத்திய சமூக நீதித்துறை முடிவெடுத்துள்ளது.

நம் நாட்டில் திருநங்கைகளின் தரம் உயர்ந்து வரும் சூழலிலும் கல்வி, வேலைவாய்ப்பில் அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப் படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. மூன்றாம் பாலினத்தவர்களை சமநிலையில் சம அந்தஸ்தில் வைத்து மதிக்க வேண்டும் என அண்மையில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் திருநங்கைகளும் பயன்பெறும் வகையில் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

ஓபிசி பட்டியலில் திருநங்கைகள்; மத்திய அரசின் அதிரடி முடிவு!

அதாவது, திருநங்கைகளை ஓபிசி பிரிவினர் பட்டியலில் சேர்ப்பதற்கான வரைவு அறிக்கையை சமூக நீதித்துறை அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது. அதற்கான ஒப்புதல் கிடைத்த பிறகு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும். பின்னர், அந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சம வாய்ப்பை வழங்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்பை பெற்றுள்ளது.