கொரோனா தடுப்பூசி விநியோகம்… மத்திய அரசின் அறிவிப்பு!

 

கொரோனா தடுப்பூசி விநியோகம்… மத்திய அரசின் அறிவிப்பு!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகள் தாங்களே தடுப்பூசி கொள்முதல் செய்ய முயற்சித்து வருகின்றன.

கொரோனா தடுப்பூசி விநியோகம்… மத்திய அரசின் அறிவிப்பு!

இந்த நிலையில், வரும் ஜூன் 21ம் தேதி முதல் புதிய தடுப்பூசி கொள்கை அமல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். மாநில அரசுகள் இனி தடுப்பூசிக்காக ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வேண்டாம் என்றும் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்றும் மோடி நேற்று அறிவித்தார். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதில் மக்கள் தொகை எண்ணிக்கை, கொரோனா பாதிப்பு அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் தடுப்பூசிகளை மாநிலங்கள் வீணடித்தால் ஒதுக்கப்படும் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தனியார் மருத்துவமனைகள் சரியான விலையில் தடுப்பூசி செலுத்துவதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என்றும் மாநிலங்களில் பாதிப்புக்கு ஏற்றவாறு தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.