ஒடிசா, மேற்கு வங்கத்தில் புயல் சேதத்துக்கு ரூ.1,500 கோடி போதாது… மத்திய அரசை குறை கூறும் ஓவைசி…

ஒடிசா, மேற்கு வங்கத்தில் புயல் சேதத்துக்கு ரூ.1,500 கோடி போதாது… மத்திய அரசை குறை கூறும் ஓவைசி…

வங்கக்கடல் பகுதியில் உருவான அம்பன் புயல் மேற்கு வங்கம், வங்கதேசததின் இடையே கரையை கடந்தது. இந்த புயல் மேற்கு வங்கம், ஒடிசாவில் பலத்த சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றது. அந்த 2 மாநிலங்களிலும் புயல் சேதத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி ஒடிசாவுக்கு ரூ.500 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ.1,000 கோடியும் அவசரகால நிவாரண நிதியாக அறிவித்தார்.

ஒடிசா, மேற்கு வங்கத்தில் புயல் சேதத்துக்கு ரூ.1,500 கோடி போதாது… மத்திய அரசை குறை கூறும் ஓவைசி…

ஆனால் இது போதாது என அனைத்து இந்திய மஜிஸ் இ இத்தேஹாதுல் முஸ்லீமின் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டியுள்ளார். அசாதுதீன் ஓவைசி இது தொடர்பாக கூறியதாவது: அந்த புயல் பல உயிர்களை கொன்றது மற்றும் பாதித்தது துரதிருஷ்டவசமானது. பிரதமர் அந்த மாநிலங்களை பார்வையிட்டார் மற்றும் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவுக்கு முறையே ரூ.1,000 கோடி மற்றும் ரூ.500 கோடி நிவாரண நிதி அறிவித்தார். இந்த நிவாரண தொகை போதுமானது அல்ல.

ஒடிசா, மேற்கு வங்கத்தில் புயல் சேதத்துக்கு ரூ.1,500 கோடி போதாது… மத்திய அரசை குறை கூறும் ஓவைசி…

பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்கு மத்திய அரசு பணியாற்ற வேண்டும். ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் அம்பன் புயல் ஏற்படுத்தியுள்ள பேரழிவு நினைத்து பார்க்க முடியாதது. இந்த மாநில மக்களுக்காக நானும் எனது கட்சியினரும் இங்கு உள்ளோம். மீட்கப்படுவதற்காக அவர்கள் கடினமாக பயணத்தை தொடங்கியுள்ளனர். நாம் அவர்களின நிவாரணத்துக்காக பிரார்த்தனை செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.