விரைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களும் இந்தியாவுடன் இருக்க விரும்புவர்…. ராஜ்நாத் சிங் உறுதி…

விரைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களும் இந்தியாவுடன் இருக்க விரும்புவர்…. ராஜ்நாத் சிங் உறுதி…

பா.ஜ.க. தலைவர்கள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஆன்லைன் பொதுக்கூட்டத்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று காஷ்மீரில் ஆன்லைன் பொதுக்கூட்டத்தை அந்த கட்சி நடத்தியது. அந்த கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

விரைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களும் இந்தியாவுடன் இருக்க விரும்புவர்…. ராஜ்நாத் சிங் உறுதி…

காஷ்மீரில் முன்பு காஷ்மீர் விடுதலை கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டன. பாகிஸ்தான் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். கொடிகள் காணப்பட்டன. ஆனால் இப்போது இந்திய கொடி மட்டுமே காணப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்க, விரைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய வேண்டும் கோரிக்கை விடுப்பார்கள் மற்றும் பாகிஸ்தான் ஆட்சியின்கீழ் இருப்பதை விரும்பமாட்டார்கள். அந்த நாளும் நிகழும். எங்கள் நாடாளுமன்றத்தின் குறிக்கோளும் நிறைவேற்றப்படும்.

விரைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களும் இந்தியாவுடன் இருக்க விரும்புவர்…. ராஜ்நாத் சிங் உறுதி…

தற்போது சீனாவுடன் ராஜதந்திர மற்றும் ராணுவ மட்டத்தில் நடந்து வருகிறது. எல்லை பிரச்சினையை பேச்சுவார்த்தை வாயிலாகவே தீர்க்க சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. மோடி அரசு எந்தவொரு நபரையும் இருட்டில் வைத்திருக்காது. அதேசமயம் எந்தவொரு சூழ்நிலையிலும் மோடி அரசு தேசத்தின் பெருமையுடன் எந்த சமரசம் செய்யாது. வெளிநாடுகளிலிருந்து சரக்குகள் இறக்குமதி செய்வதை நிறுத்த நமது அரசு முடிவு செய்துள்ளது. நம் நாடு உலகில் இறக்குமதி செய்யும் நாடு என அறியப்படக்கூடாது, ஆனால் இந்தியா ஏற்றுமதி நாடாக அறியப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.