மத்திய பட்ஜெட் : அல்வா வழங்கினார் நிர்மலா சீதாராமன்

 

மத்திய பட்ஜெட் : அல்வா வழங்கினார் நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா விநியோகித்தார்.

கொரோனா பரவல் காரணமாக குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்ற
பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.29ம் தேதி தொடங்கவிருப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அன்றைய தினம், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். இதையடுத்து, வரும் 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார்.

மத்திய பட்ஜெட் : அல்வா வழங்கினார் நிர்மலா சீதாராமன்

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டம் ஜன.29 முதல் பிப்.15 வரையிலும், இரண்டாம் கட்டம் மார்ச் 8 முதல் ஏப்.8ம் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பான அறிவிப்பு வெளியானவுடன், பிப்.2ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டை தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்படைந்தன.

மத்திய பட்ஜெட் : அல்வா வழங்கினார் நிர்மலா சீதாராமன்

இந்த நிலையில், மத்திய பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா.விநியோகித்தார். மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகும் முன், அல்வா சமைத்து விநியோகிப்பது நிதி அமைச்சகத்தில் உள்ள வழக்கமான நடைமுறை தான் என்பது குறிப்பிடத்தக்கது.