மீண்டும் லாப பாதைக்கு திரும்பிய யூனியன் பேங்க் ஆப் இந்தியா

 

மீண்டும் லாப பாதைக்கு திரும்பிய யூனியன் பேங்க் ஆப் இந்தியா

பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்க் ஆப் இந்தியா தனது ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் அந்த வங்கி நிகர லாபமாக 332.74 கோடி ஈட்டியுள்ளது. 2019 ஜூன் காலாண்டில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா லாபமாக ரூ.224.43 கோடி ஈட்டியிருந்தது. அதேசமயம் 2020 மார்ச் காலாண்டில் அந்த வங்கிக்கு ரூ.2,503.2 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

மீண்டும் லாப பாதைக்கு திரும்பிய யூனியன் பேங்க் ஆப் இந்தியா
யூனியன் பேங்க் ஆப் இந்தியா

2020 ஜூன் காலாண்டில் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் நிகர வட்டி வருவாய் ரூ.6,403.2 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 154.2 சதவீதம் அதிகமாகும். கடந்த ஜூன் காலாண்டு இறுதி நிலவரப்படி யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் மொத்த வாராக் கடன் 0.80 சதவீதம் உயர்ந்து 14.95 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேசமயம் இதே காலத்தில் நிகர வாராக்கடன் 0.52 சதவீதம் குறைந்து 4.97 சதவீதமாக குறைந்துள்ளது.

மீண்டும் லாப பாதைக்கு திரும்பிய யூனியன் பேங்க் ஆப் இந்தியா
வங்கிகள் இணைப்பு

இது, ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றை பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைத்த பிறகு வெளியிட்டப்பட்டுள்ள முதல் காலாண்டு முடிவாகும். இதில், முந்தைய ஆந்திர வங்கி மற்றும் முன்னாள் கார்ப்பரேஷன் வங்கியின் செயல்பாடுகள் அடங்கும். எனவே கடந்த (ஜூன்) காலாண்டின் நிதி முடிவுகளை முந்தைய காலாண்டு மற்றும் கடந்த ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிட முடியாது என யூனியன் பேங்க் ஆப் இந்தியா பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்துள்ளது.