கிளர்ச்சியில் ஈடுபடாதீங்க.. டிசம்பர் 3ம் தேதி பேசுவோம்.. விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த மத்திய அமைச்சர்

கிளர்ச்சியில் ஈடுபடாதீங்க.. டிசம்பர் 3ம் தேதி பேசுவோம்.. விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த மத்திய அமைச்சர்

மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான வேறுபாடுகளை தீர்க்க விவசாயிகளை டிசம்பர் 3ம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த செப்டம்பர் 27ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக பேரணியாக வந்த பஞ்சாப் விவசாயிகளை ஹரியானா எல்லையில் அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாயிகள் தடுப்புகளை மீறி முன்னேற முயன்றதால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை தடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கிளர்ச்சியில் ஈடுபடாதீங்க.. டிசம்பர் 3ம் தேதி பேசுவோம்.. விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த மத்திய அமைச்சர்
நரேந்திர சிங் தோமர்

இந்த சூழ்நிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பான வேறுபாடுகளை தீர்க்க மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமா் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விட்டார். மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இது தொடர்பாக கூறியதாவது: எங்கள் விவசாய சகோதரர்களிடம் கிளர்ச்சி செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். சிக்கல்களை பற்றி பேசவும், வேறுபாடுகளை தீர்க்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

கிளர்ச்சியில் ஈடுபடாதீங்க.. டிசம்பர் 3ம் தேதி பேசுவோம்.. விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த மத்திய அமைச்சர்
விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சி எடுத்த போலீசார்

நமது உரையாடல் சாதகமான பலனை தரும் என்று நான் நம்புகிறேன். புதிய வேளாண் சட்டங்கள் காலத்தின் தேவை. வரவிருக்கும் நேரத்தில், இது (புதிய வேளாண் சட்டங்கள்) புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வரப்போகிறது. அங்குள்ள எங்கள் விவசாயி சகோதரர்களின் தவறான கருத்துக்களை அகற்ற பஞ்சாய் செயலாளர் மட்டத்தில் பேசியுள்ளோம். டிசம்பர் 3ம் தேதி பேசுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.