“எண்ணி வச்சிக்கோங்க… பத்தே நாள் தான்… மின்வெட்டுக்கு டாடா” – அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!

“எண்ணி வச்சிக்கோங்க… பத்தே நாள் தான்… மின்வெட்டுக்கு டாடா” – அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!

திமுக ஆட்சிக்கு வந்ததுமே மின்வெட்டு புகார்களும் சேர்ந்தே வந்துவிட்டது. அதுவும் திமுக அரியணையில் அமர்ந்த ஒரு வாரத்திலேயே புகார் பெட்டிகள் நிறைந்தன. எல்லா பந்திலும் சிக்ஸர் அடித்த முதலமைச்சர் ஸ்டாலினால் இந்த யார்க்கர் பந்தில் மட்டும் அடிக்கவே முடியவில்லை. இதே மின்தடைக்கு தான் ஐந்து வருட ஆட்சியைப் பறிகொடுத்தது. அடித்துப் பிடித்து 10 வருடங்கள் கழித்து ஆட்சிக்கு வந்த பிறகு நந்தி போல மின்தடை குறுக்கே வருகிறது. விடாது கருப்பாக திமுகவை சுற்றியே வலம் வருகிறது.

“எண்ணி வச்சிக்கோங்க… பத்தே நாள் தான்… மின்வெட்டுக்கு டாடா” – அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் இந்த 10 நாட்களுக்குள் சரியாகிவிடும், அந்த 10 நாட்களுக்குள் சரியாகிவிடும் என்று சொல்லி சொல்லி ஓய்ந்துவிட்டார். பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் நான் நகர மாட்டேன் என்பது போலவே மின்தடை சிம்மசொப்பனமாக மாறி நிற்கிறது. இதுதான் சமயம் என எதிர்க்கட்சிகள் திமுக அரசை வறுத்தெடுத்து வருகின்றன. இதற்கு முந்தைய அரசின் அலட்சியமே காரணம் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகிறார். கடந்த 9 மாதங்களாக மின் பரமாரிப்பு பணிகள் நடைபெறாததால் இதுபோன்று ஏற்படுவதாக விளக்கமளித்தார்.

“எண்ணி வச்சிக்கோங்க… பத்தே நாள் தான்… மின்வெட்டுக்கு டாடா” – அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!

ஆனால் முன்னாள் அமைச்சர் தங்கமணி இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். புனரமைப்பு பணிகள் முடிவடைந்து 10 நாட்களுக்குள் பிரச்சினைகள் களையப்படும் என செந்தில் பாலாஜி கூறியிருந்தார். ஆனால் இன்னமும் சரியாகவில்லை. இதையடுத்து புது காரணம் ஒன்றை அவர் கூறினார். அதாவது மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது என்றார். இதையும் விமர்சித்த ராமதாஸ், “சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ?” என கிண்டல் செய்தார்.

“எண்ணி வச்சிக்கோங்க… பத்தே நாள் தான்… மின்வெட்டுக்கு டாடா” – அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!

இச்சூழலில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது. அப்போது பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்களும், தாங்கள் எடுத்த நடவடிக்கைகளைப் பட்டியலிட்டனர். மேலும் குறைகளையும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர். இந்தத் தீர்மானத்தின் போது பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, “9 மாதங்களாக அதிமுக அரசு எவ்விதம் மின் பராமரிப்பும் செய்யாததே மின்வெட்டுக்கு காரணம். தமிழ்நாட்டில் 10 நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்” என உறுதியளித்தார்.