ஆர்வம் காட்டாத ராகுல் காந்தி…. சோனியா காந்தியே இடைக்கால தலைவராக தொடர வாய்ப்பு..

 

ஆர்வம் காட்டாத ராகுல் காந்தி…. சோனியா காந்தியே இடைக்கால தலைவராக தொடர வாய்ப்பு..

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவியேற்று நாளையோடு ஓராண்டு நிறைவடைகிறது. ஆனால் இன்னும் அந்த கட்சிக்கு முழு நேர புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் ராகுல் காந்தி மீண்டும் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் தொடர்ந்து வெளிப்படையாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ராகுல் காந்தியோ தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார்.

ஆர்வம் காட்டாத ராகுல் காந்தி…. சோனியா காந்தியே இடைக்கால தலைவராக தொடர வாய்ப்பு..

ராகுல் காந்தி கட்சி தலைவராக பொறுப்பேற்க விருப்பம் இல்லாதது போல் இருக்கிறார். இதனால் சோனியா காந்தியே இடைக்கால தலைவராக தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ராகுல் காந்தி தலைவராக பொறுப்பேற்கவில்லை என்றால், உட்கட்சி தேர்தல் நடத்தி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும், அவர் கட்சியை அதிகாரப்பூர்வமாக கட்சியை வழிநடத்த மாட்டார் என்றாலும் முக்கிய கூட்டங்கள் மற்றும் விஷயங்களில் அவர் பங்கேற்பார் என ஒரு அந்த கட்சியின் சில தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆர்வம் காட்டாத ராகுல் காந்தி…. சோனியா காந்தியே இடைக்கால தலைவராக தொடர வாய்ப்பு..

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எப்படியேனும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிரமாக பிரச்சாரம் செய்தார். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அவருக்கு பெரிய அதிர்ச்சியை அளித்தது. அந்த தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மைக்கு தேவையானதை காட்டிலும் அதிக இடங்களை வென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் ஆட்சியை பிடித்தது. இதனால் வெறுத்து போன ராகுல் காந்தி நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகினார். இதனையடுத்து 2019 ஆகஸ்ட் 10ம் தேதியன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார்.