ஃபேர் அண்ட் லவ்லி இனி ‘க்ளோ அண்ட் லவ்லி’யாக மாறுகிறது!

 

ஃபேர் அண்ட் லவ்லி இனி ‘க்ளோ அண்ட் லவ்லி’யாக மாறுகிறது!

அழகு என்பது நிறம் என்று மாறிவிட்டது அகராதியில். பிறக்கும் போதே தள்ளப்படுகிறார்கள் நிறம் என்ற அறைக்குள். இது ஜார்ஜ் பிளாய்ட் மரணம் வரை தொடர்கிறது. ஜார்ஜ் மரணத்துக்கு நீதிக்கேட்டு அமெரிக்கா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றன.

ஃபேர் அண்ட் லவ்லி இனி ‘க்ளோ அண்ட் லவ்லி’யாக மாறுகிறது!

ஹிந்துஸ்தான் யூனிலிவரின் ஃபேர் அண்ட் லவ்லி பேர்னஸ் கிரீம் ஆண்டுக்கு 560 மில்லியன் டாலர் வரை விற்பனையாகிறது. Fair, White, Light உள்ளிட்ட வார்த்தைகள் சிவப்பாக இருப்பதே அழகு என பொருள்படும்படி தெரிவதால் ஹிந்துஸ்தான் நிறுவனம் ஃபேர் அண்ட் லவ்லி என்ற வார்த்தையில் உள்ள ஃபேர் என்ற வார்த்தையை நீக்க முடிவு எடுத்துள்ளது. “சிவப்பாக மாறுவதே அழகு” என்ற பொருளில் இது உள்ளதால், இந்த முடிவை எடுத்திருப்பதாக அந்நிறுவனம் விளக்கம் தந்துள்ளது. இந்த பெயரை மாற்றுவதற்காக ஒழுங்குமுறை ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.

ஃபேர் அண்ட் லவ்லி இனி ‘க்ளோ அண்ட் லவ்லி’யாக மாறுகிறது!

இந்நிலையில் ஃபேர் அண்ட் லவ்லி என்ற பெயரில் உள்ள ஃபேர் வார்த்தையை நீக்கி அதற்குப் பதிலாக க்ளோ என்ற வார்த்தையைப் பயன்படுத்தப்போவதாக அதனைத் தயாரிக்கும் ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படுகிறது.