நெல் கொள்முதலுக்கு ரூ.22,800 லஞ்சம் பெற்ற இளநிலை உதவியாளர் கைது!

 

நெல் கொள்முதலுக்கு ரூ.22,800 லஞ்சம் பெற்ற இளநிலை உதவியாளர் கைது!

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே விவசாயியிடம் நெல் கொள்முதல் செய்ய ரூ.22, 800 லஞ்சம் பெற்றதாக கொள்முதல் நிலைய இளநிலை உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் இளநிலை உதவியாளராக குணசேகரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடலூர் மாவட்டம் அவியனூரை சேர்ந்த விவசாயி ஏழுமலை என்பவர், தனது நிலத்தில் அறுவடை செய்த 328 மூட்டை நெல்லை கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்காக கொண்டு சென்றுள்ளார்.

நெல் கொள்முதலுக்கு ரூ.22,800 லஞ்சம் பெற்ற இளநிலை உதவியாளர் கைது!

அப்போது, ஏழுமலையிடம் மூட்டைக்கு ரூ.50 வீதம் ரூ.22 ஆயிரத்து 800 லஞ்சமாக கொடுக்க வேண்டும் என குணசேகரன் கேட்டுள்ளார். அதனை கொடுக்க விரும்பாத, ஏழுமலை இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் அளித்தார். தொடர்ந்து, அவர்கள் வழங்கிய ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.22,800 பணத்தை நேற்று, இளநிலை உதவியாளர் குணசேகரனிடம் வழங்கினார்.

அப்போது, நெல் கொள்முதல் நிலையத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், குணசேகரனை கையும், களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.