3 மாதத்திற்குப் பிறகு 37 ஆயிரத்துக்குக் கீழ் புதிய நோயாளிகள் – இந்தியாவில் கொரோனா

3 மாதத்திற்குப் பிறகு 37 ஆயிரத்துக்குக் கீழ் புதிய நோயாளிகள் – இந்தியாவில் கொரோனா

கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தினசரிபுதிய நோயாளிகள் அதிகரிப்பதில் உலகளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் முதல் முறையாக, புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 37,000-க்கு கீழ் வந்துள்ளது.

3 மாதத்திற்குப் பிறகு 37 ஆயிரத்துக்குக் கீழ் புதிய நோயாளிகள் – இந்தியாவில் கொரோனா

இறுதியாக 2020 ஜூலை 18 அன்று தினசரி பாதிப்புகள் 34,884 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் உறுதி செய்யப்பட்ட புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 36,470 ஆக உள்ளது.

அதிக அளவிலான கொவிட் நோயாளிகள் தினமும் குணமடைந்து வருவதால் இறப்பு விகிதமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.

3 மாதத்திற்குப் பிறகு 37 ஆயிரத்துக்குக் கீழ் புதிய நோயாளிகள் – இந்தியாவில் கொரோனா

தற்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கை 6.25 லட்சமாக சரிந்துள்ளது. நாட்டில் தற்போது மொத்தம் 6,25,857 நபர்கள் கொவிட் தொற்றோடு உள்ளார்கள். இது வரையிலான மொத்த பாதிப்புகளுடன் ஒப்பிடும் போது இது வெறும் 7.88 சதவீதம் ஆகும்.

நாட்டின் தற்போதைய பாதிப்புகளில் 35 சதவீதம் வெறும் 18 மாவட்டங்களில் உள்ளன. குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 72 லட்சத்தை தாண்டியுள்ளது (72,01,070). கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63,842 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தேசிய குணமடைதல் விகிதம் 90.62 சதவீதத்தை எட்டியுள்ளது.

3 மாதத்திற்குப் பிறகு 37 ஆயிரத்துக்குக் கீழ் புதிய நோயாளிகள் – இந்தியாவில் கொரோனா

இது வரை குணமடைந்தவர்களில் 78 சதவீதம் பேர் 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

3 மாதத்திற்குப் பிறகு 37 ஆயிரத்துக்குக் கீழ் புதிய நோயாளிகள் – இந்தியாவில் கொரோனா

இந்திய அளவில் குணமடையும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு நான்காம் இடத்திலும், புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் ஆறாம் இடத்திலும், தினசரி இறப்பு எண்ணிக்கையில் ஆறாம் இடத்திலும் தமிழ்நாடு மாநிலம் உள்ளது.