3500 க்கும் கீழ் – இலங்கையில் கொரோனா தனிமைப்படுத்தப் பட்டவர்களின் எண்ணிக்கை

3500 க்கும் கீழ் – இலங்கையில் கொரோனா தனிமைப்படுத்தப் பட்டவர்களின் எண்ணிக்கை

உலகின் மாபெரும் பேரிடராக கடந்த ஒன்பது மாதங்களாகத் தொல்லை தருவது கொரோனா வைரஸ் தாக்குதல்தான். சென்ற ஆண்டு சீனாவில் தொடங்கிய இந்தத் துயரம் இன்னும் முடிந்தபாடில்லை.

ஆயினும் நியூசிலாந்து கடந்த 100 நாட்களாக புதிய கொரோனா நோயாளிகள் இல்லை என அறிவித்திருப்பது ஆறுதலான செய்தி. மற்ற நாடுகளிலும் வெகுவாகக் குறைந்துவருகிறது.

3500 க்கும் கீழ் – இலங்கையில் கொரோனா தனிமைப்படுத்தப் பட்டவர்களின் எண்ணிக்கை

இலங்கையில் தொடக்கம் முதலே கொரோனா நோய்த் தொற்றலைக் கட்டுப்படுத்தியே வருகிறது. அதனால்தான் தேர்தலையே வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. ராஜபக்‌ஷே கட்சி வெற்றிபெற்றதுக்கு கொரோனாவைக் கட்டுப்படுத்தியதும் ஒரு காரணம் என அந்நாட்டு விமர்சகர்களால் கூறப்படுகிறது.

இலங்கையில் தொடக்கம் முதலே லாக்டெளன் அறிவிக்கப்படு, நோய் கண்டறியப் பட்டவர்கள் தனிமைப் படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறார்கள்.

இதுவரைக்கும் 29,757 பேர் தனிமைப்படுத்தப்பட்டு முழு குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள்.

3500 க்கும் கீழ் – இலங்கையில் கொரோனா தனிமைப்படுத்தப் பட்டவர்களின் எண்ணிக்கை
Blood sample tube positive with COVID-19 or novel coronavirus 2019 found in Wuhan, China

இப்போதைக்கு இலங்கையில் 39 முகாம்களில் 3449 பேர் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு செய்தி தெரிவிக்கிறது.

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறைந்ததால், பள்ளிகளைத் திறக்க உத்தரவிட்டது அரசு. அதன்படி நேற்றுமுதல் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து 200க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையிலான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.