செவிலியர் மரணத்தில் குழப்பம்… பழனிசாமி அரசு செலுத்தும் நன்றிக்கடன் இதுதானா? – டி.டி.வி.தினகரன் கேள்வி

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்தார் என்று தெரிவித்துவிட்டு பிறகு கவனக்குறைவாக அப்படி குறிப்பிட்டிருப்பார்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது. செவிலியருக்கு பழனிசாமி அரசு காட்டும் நன்றிக்கடன் இதுதானா என்று டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

TTV Dhinakaran
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டிருந்த சென்னை அரசு மருத்துவமனை தலைமை செவிலியரின் மரணம் குறித்து வெளியாகும் தகவல்களும் அதற்கு அளிக்கப்படும் விளக்கமும் கொரோனா பெருந்தொற்று நோய் தடுப்பில் தமிழக அரசு நிர்வாகம் எவ்வளவு மோசமாக செயல்படுகிறது என்பதற்குச் சாட்சியாக அமைந்திருக்கிறது. திறனற்ற இந்த ஆட்சியாளர்கள் தமிழகத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தப்போகிறார்களோ என்ற கவலையும் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியராக பணியாற்றி வந்த ஜோன் மேரி பிரிசில்லா கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. கவச உடை அணிந்த ஊழியர்கள்தான் அவரது உடலை வெளியில் கொண்டு வந்திருக்கின்றனர்.

அதன்பிறகு என்ன நடந்ததோ, அவர் கொரோனா பாதிப்பால் இறக்கவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்தது. பிரிசில்லாவின் கேஸ் ஷீட்டில் கோவிட்19 வைரசால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததாக குறிக்கப்பட்டிருந்ததை அவரது சகோதரர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அதற்கு, கோவிட்- 19 என்று யாராவது தவறாக எழுதியிருப்பார்கள் என்றொரு அலட்சியமான பதிலை மருத்துவமனை தரப்பு அளித்திருக்கிறது.
தலைமை செவிலியருக்கே இந்த நிலைமை என்றால் மற்ற நோயாளிகளின் கதி என்ன? இந்த லட்சணத்தில் சுகாதாரத்துறை செயல்படுகிறதா? கொரோனா தடுப்புப்பணியில் உயிரிழந்ததாக சொன்னால், அதற்கான இழப்பீடு அளிக்க வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றிக் கூறப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இது உண்மை எனில், பணிக்காலம் முடிந்த பிறகும் கொரோனா எதிர்ப்புக்களத்தில் பணிபுரிந்த அந்த செவிலியருக்கு பழனிசாமி அரசு செலுத்தும் நன்றிக்கடன் இதுதானா? கொரோனா தடுப்புப்பணியில் போராடி வரும் மருத்துவத்துறையினருக்கு அரசாங்கம் கொடுக்கும் மரியாதை இவ்வளவுதானா?
இதைப் பார்த்தபிறகு அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொள்வது பற்றி மக்களிடம் புதிய சந்தேகங்களும், பயமும் ஏற்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் நிலைமை கவலைக்கிடமாகிக்கொண்டே செல்கிறது.

chennai
இதிலெல்லாம் கவனம் செலுத்துவதற்கு பதில், ஊடகங்களிடம் வீராவேசமாகவும், உருக்கமாகவும் மாறி,மாறி சினிமா வசனங்களைப்போலப் பேசுவது மட்டுமே போதுமென்று முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் நினைக்கிறார்களா? என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனால், பெரும் தொற்று நோயைத் தடுப்பதற்கு உண்மையான அக்கறையோ, ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களோ இல்லாத இவர்களின் செயல்பாடுகளை மக்கள் வெறுக்கிறர்கள் என்பதையாவது உணர்வார்களா?” என்று கூறியுள்ளார்.

Most Popular

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு!

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி லாஜிஸ்டிக் மற்றும் பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட முன்னனி 5 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக, லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களான (FedEX) பெடக்ஸ், யு.பி.எஸ்...

சீனாவுக்கு படையெடுத்த வெட்டுக்கிளி!

பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டிய வெட்டுக்கிளிகள் சீனாவில் நுழைந்துள்ளன. கொரானாவால் நாட்டின் நிதி நிலைமை கெட்டது என்றால்,சமீபத்தில் படையடுத்து வரும் வெட்டுக்கிளிகளால் எதிர்காலத்தில் உணவுப்பஞ்சம் ஏற்படுமோ என்று அச்சம் உருவாகியுள்ளது. இந்தியாவில் வடமாநிலங்களுக்குள்...

கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.02% ஆக உயர்வு- மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 8,78, 254 லிருந்து 9,04,225 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,69, 753 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,711 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார...

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் வெளியிட்டு வருகிறது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய...
Open

ttn

Close