ஸ்மார்ட் போன் இல்லை… ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை

 

ஸ்மார்ட் போன் இல்லை… ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை

கேரளாவில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத காரணத்தால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வரவில்லை. பள்ளிகள் திறக்க இன்னும் பல மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் இருந்து கட்டணத்தை வசூலிக்க ஆன்லைன் வகுப்புகள் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தன. தற்போது நாடு முழுக்க ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. எல்.கே.ஜி மாணவர்களுக்குக் கூட ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படுகிறது, உடனடியாக ஃபீஸ் கட்டுங்கள் என்று பள்ளிகள் பணம் வசூலிப்பதில் குறியாக உள்ளன.
இந்த நிலையில் கேரளாவில் பள்ளி மாணவி ஒருவர் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தன்னுடைய வீட்டில் ஸ்மார்ட் போன் இல்லை… தொலைக்காட்சி வேலை செய்யவில்லை என்ற மன விரக்தியில் 9ம் வகுப்பு மாணவி உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார் என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்மார்ட் போன் இல்லை… ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலைகேரள மாநிலம் மலப்புரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி கேரள மாநில கல்வித் துறை அமைச்சர் ரவீந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
நகரங்களில் இன்று எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன்கள் உள்ளன. நகரங்களில் உள்ள குடிசைப் பகுதிகளில் எல்லோர் கையிலும் போன் உள்ளதா என்பது கேள்விக்குறிதான். அதேபோல் கிராமங்களில் ஸ்மார்ட் போன் என்பது எல்லாம் எல்லோராலும் முடியாதது. ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கவில்லை என்பதே பலருக்கும் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடுகிறது. மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு மாணவர்களின் நலன் காக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் வேண்டுகோள்.