’17 பேர் மரணம்’ மேட்டுப்பாளையத்தில் மீண்டும் கட்டப்பட்ட தீண்டாமை சுவர் : தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்!

’17 பேர் மரணம்’ மேட்டுப்பாளையத்தில் மீண்டும் கட்டப்பட்ட தீண்டாமை சுவர் : தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சுமார் 80 அடி நீளம், 20 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த சுற்று சுவர் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த சுவர் அருகில் இருந்த 4 ஓட்டு வீடுகளின் மேல் விழுந்ததால், வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

’17 பேர் மரணம்’ மேட்டுப்பாளையத்தில் மீண்டும் கட்டப்பட்ட தீண்டாமை சுவர் : தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்!

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சிவசுப்பிரமணியன் என்பவர் கட்டிய தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து ஆதித்திராவிடர சமூகத்தை சேர்ந்த 17 உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்ததையடுத்து, சிவசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், மீண்டும் அந்த சுவரை கட்டி விட்டார்.

’17 பேர் மரணம்’ மேட்டுப்பாளையத்தில் மீண்டும் கட்டப்பட்ட தீண்டாமை சுவர் : தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்!

இந்த நிலையில், அரசு அனுமதியுடன் மேட்டுப்பாளையத்தில் மீண்டும் அந்த தீண்டாமை சுவர் கட்டப்பட்டதால் மாவட்ட நிர்வாகத்திற்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.