“10 லட்சம் மரணம் – எண்கள் அல்ல மனித உயிர்கள்” கொரோனா பற்றி ஐநா பொதுச்செயலாளர் வேதனை

“10 லட்சம் மரணம் – எண்கள் அல்ல மனித உயிர்கள்” கொரோனா பற்றி ஐநா பொதுச்செயலாளர் வேதனை

உலகம் இதுவரை சந்தித்திராத பேரிடரை கொரோனாவால் எதிர்கொண்டிருக்கிறது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 10 பத்து லட்சம் பேரை இழந்திருக்கிறோம்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 38 லட்சத்து  44 ஆயிரத்து 178 பேர்.    

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 51 லட்சத்து 48 ஆயிரத்து 403 நபர்கள்.

“10 லட்சம் மரணம் – எண்கள் அல்ல மனித உயிர்கள்” கொரோனா பற்றி ஐநா பொதுச்செயலாளர் வேதனை

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 12 ஆயிரத்து 659 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.   

அமெரிக்காவில் மட்டுமே  2 லட்சத்து 10 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் ப்துச்செயலாளர் ஆன்டனியோ குட்ரெர்ஸ் தனது கடும் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

“10 லட்சம் மரணம் – எண்கள் அல்ல மனித உயிர்கள்” கொரோனா பற்றி ஐநா பொதுச்செயலாளர் வேதனை

”உலகம் முழுக்க ஒரு மில்லியன் கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது. அவை வெறும் எண்கள் அல்ல மனித உயிர்கள். உலகமே பெரிய வேதனையில் உள்ளது. நாம் நம்முடைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள தயாராக வேண்டும். கொரோனா நோய்ப் பரவைத் தடுக்க மக்களின் ஒத்துழைப்பு முக்கியம். அதேபோல நல்ல தலைமையும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் அவசியம்.

மக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதும், கைகளை அவ்வப்போது சுத்தம் செய்துகொள்வதையும் தவறாது பின்பற்ற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.