ஐநா நல்லெண்ண தூதராக சலூன்கடைக்காரர் மகளை நியமிக்கவில்லை: ஐநா விளக்கம்

 

ஐநா நல்லெண்ண தூதராக சலூன்கடைக்காரர் மகளை நியமிக்கவில்லை: ஐநா விளக்கம்

கொரோனா வைரஸ் இந்தியாவை முற்றிலுமாக புரட்டி போட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 7 ஆவது இடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகின. இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும், கொரோனா பாதிப்பு குறைந்ததாக இல்லை. இதனால் புதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு பலர் உதவி வருகின்றனர். அதே போல மதுரை மேலடை பகுதியில் வசித்து வரும் மோகன் என்னும் முடிதிருத்தும் தொழில் செய்து வருபவர் தனது மகளின் கல்வி செலவுக்கு சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை ஏழைகளுக்கு உதவினார். இதனால் மோகனுக்கு மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்தார். இதையடுத்து மோகன் குடும்பத்தினர் பாஜகவில் இணைந்ததாக வெளியான தகவலை அவர் மறுத்தார். இன்று காலை முதல் தமிழகத்தின் பிரபல ஊடகங்கள் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதராக மோகனின் மகள் அறிவிக்கப்பட்டதாக செய்திகள் ஒளிபரப்பானது.

ஐநா நல்லெண்ண தூதராக சலூன்கடைக்காரர் மகளை நியமிக்கவில்லை: ஐநா விளக்கம்

இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் சபை அப்படியான ஓர் அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. முதுகளத்தூர் மாணவி நேத்ராவை நல்லெண்ணத் தூதராக நியமித்திருப்பது UNADAP (மேம்பாடு மற்றும் அமைதிக்கான ஐக்கிய நாடுகளின் சங்கம்) என்கிற ஓர் அரசு சாரா அமைப்பு என்றும், இது ஐ.நா., சபையின் கிளை நிறுவனமோ அல்லது துணை அமைப்போ அல்ல என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஐ.நா., சபை எவ்வித உதவித்தொகையும் அறிவிக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. UNADAP நிறுவனம்தான் மாணவி நேத்ராவுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான உதவித்தொகையையும் அளித்துள்ளது. UNADAP நிறுவனத்தின் லோகோவும் ஐ.நா., சபையின் லோகவும் வேறு வேறு. ஆனால் அது தெரியாமல் ஐநா நல்லெண்ணத் தூதராக நியமித்திருப்பதாக அனைத்து ஊடகங்களும் தவறான செய்தியை வெளியிட்டன.