அம்பயர் திடீர் விலகல்… ஐபிஎல் ஒத்திவைக்கப்படுமா?

 

அம்பயர் திடீர் விலகல்… ஐபிஎல் ஒத்திவைக்கப்படுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் ஐபிஎல் முக்கியமா என்று ஒரு கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவே சுடுகாடாக மாறிக் கொண்டிருக்கும்போது மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே ஐபிஎல் நடத்தப்படுவதாக விமர்சனம் எழுந்தது.

அம்பயர் திடீர் விலகல்… ஐபிஎல் ஒத்திவைக்கப்படுமா?

இதனிடையே கொரோனா அச்சம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து பல வீரர்கள் பாதியிலேயே விலகினர். குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை ஆகியோர் ஆஸ்திரேலியாவிற்குப் புறப்பட்டுச் சென்றனர். இந்திய வீரரான அஸ்வினும் தொடரிலிருந்து பாதியிலேயே விலகினார். இதனால் ஐபிஎல் தொடர் கைவிடப்படுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

அம்பயர் திடீர் விலகல்… ஐபிஎல் ஒத்திவைக்கப்படுமா?
bcci

அதற்குப் பதிலளித்த பிசிசிஐ தலைவர் கங்குலி, ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும். கொரோனா அச்சம் இருக்கும் வீரர்கள் எங்களிடம் தெரிவித்தால் அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வோம் என்றார். இச்சூழலில் தொடரிலிருந்து இரண்டு நடுவர்கள் திடீரென்று விலகல் முடிவை எடுத்திருக்கின்றனர். இந்தியாவைச் சேர்ந்த நிதின் மேனனும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பால் ரீஃபெல்லும் விலகுவதாக அறிவித்தனர். இதில் நிதின் மேனன் மனைவி மற்றும் தாயாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் விலகியிருக்கிறார்.

அம்பயர் திடீர் விலகல்… ஐபிஎல் ஒத்திவைக்கப்படுமா?

பால் ரீஃபெல் தொடரிலிருந்து விலகிவிட்டு கத்தாரிலிருந்து ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் ஆஸ்திரேலிய நாடு இந்தியா மட்டுமல்லாமல் அங்கும் விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளது. இதனால் அவரால் ஆஸ்திரேலியா செல்ல முடியவில்லை. நல்வாய்ப்பாக அவர் பயோ பபிளிலிருந்து வெளியேறததால் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் நடுவராகச் செயல்படுவார். இருப்பினும் தொடர் முடிந்த பிறகே அவர் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முடியும்.