தாயத்துகளில் அடைக்கப்பட்ட தொப்புள் கொடி ஸ்டெம்செல்!

 

தாயத்துகளில் அடைக்கப்பட்ட தொப்புள் கொடி ஸ்டெம்செல்!

ஸ்டெம் செல்… தாயின் கருவிலிருந்து உருவாகும் ஸ்டெம் செல்லில் இருந்துதான் குழந்தையின் ஒட்டுமொத்த உறுப்புகளும் உருவாகின்றன. ரத்தம், கருமுட்டையில் தொடங்கி தொப்புள் கொடி, நஞ்சுக்கொடி, எலும்பு மஜ்ஜை, தசை, தோல்,மூளை உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளில் ஏராளமான ஸ்டெம் செல்கள் உள்ளன. அவற்றிலிருந்து பிரித்து பாதுகாக்கப்படும் ஸ்டெம் செல்களை உயிர்க்கொல்லி நோய்களுக்கு சிகிச்சையளிக்க நவீன மருத்துவம் பயன்படுத்துகிறது. அதனால்தான் இன்றைக்கு குழந்தை பிறந்ததும் தொப்புள்கொடி ஸ்டெம்செல்களை சேமித்து வைக்கும் நடைமுறை அதிகரித்துள்ளது.

தாயத்துகளில் அடைக்கப்பட்ட தொப்புள் கொடி ஸ்டெம்செல்!தாய் – சேய் உறவு:
மருத்துவம் அசுர வளர்ச்சி அடைந்துவிட்டாலும் குணப்படுத்த முடியாத நோய்களின் வரிசையில் உள்ள ரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட நோய்களைக் குணப்படுத்த தொப்புள் கொடி ஸ்டெம்செல்களை ஹைடெக் முறையில் சேமித்து வைத்து பாதுகாப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்றைய சூழலில் யாருக்கு எந்த நோய் வரும் என்று சொல்லமுடியாத ஒரு நிலை உள்ளது. அதனால் ஸ்டெம்செல்களை பாதுகாப்பதில் பலரும் அக்கறை காட்டி வருகிறார்கள்.

தாயத்துகளில் அடைக்கப்பட்ட தொப்புள் கொடி ஸ்டெம்செல்!தாய்க்கும் சேய்க்குமான உன்னதமான உறவை எடுத்துச் சொல்வது தொப்புள் கொடி. குழந்தை பிறந்த சில நிமிடங்களில் அந்த தொப்புள் கொடி இணைப்பு துண்டிக்கப்படும். இதுநாள்வரை தாயின் கர்ப்பத்தில் இருந்த அந்தக் குழந்தைக்கு ஊட்ட உணவுகளையும் பிராண வாயுவையும் கொண்டு சென்றது அந்த தொப்புள் கொடி. ஆனால், 10 மாதம் கழிந்து கருவிலிருந்து வெளியே வந்ததும் முதலில் அந்த தொப்புள் கொடி அறுக்கப்படுகிறது. அத்தகைய தொப்புள் கொடியில் நோய்களை எதிர்த்துப் போராடும் ஸ்டெம்செல்கள் அதிகமாக இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

தாயத்துகளில் அடைக்கப்பட்ட தொப்புள் கொடி ஸ்டெம்செல்!தாயத்து:
தொப்புள் கொடியின் மகத்துவம் தெரிந்ததால்தான் நம் முன்னோர் தொப்புள் கொடியை அறுத்து தாயத்து அல்லது பானையில் போட்டு பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு இந்த அறிவியல் உண்மை தெரிய வாய்ப்பிலை என்றாலும் இத்தனைக்காலம் இந்த தொப்புள் கொடிதானே இந்த தாய்க்கும் சேய்க்குமான உறவுப்பாலமாக இருந்தது என்பதால் அதை பத்திரப்படுத்தி வைத்திருக்கலாம்.

இன்னும் சிலர் குழந்தையின் இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் தாயத்தின் உள்ளே இருக்கும் தொப்புள் கொடி பயத்தைப் போக்கும் என்றும் சிலர் நம்பியிருந்தனர். இயற்கையான முறையில் ஆனால் உலர்ந்த நிலையில் தொப்புள் கொடியை சேமித்து வைக்கும் பழக்கம் அப்போதே இருந்திருக்கிறது.