அல்ட்ராடெக் சிமெண்ட் லாபம் 45 சதவீதம் வீழ்ச்சி.. பங்கு ஒன்றுக்கு ரூ.37 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை..

 

அல்ட்ராடெக் சிமெண்ட் லாபம் 45 சதவீதம் வீழ்ச்சி.. பங்கு ஒன்றுக்கு ரூ.37 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை..

2021 மார்ச் காலாண்டில் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.1,775.23 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமான அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2021 மார்ச் காலாண்டில் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.1,775.23 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 45.2 சதவீதம் குறைவாகும். 2020 மார்ச் காலாண்டில் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் ரூ.3,240.23 கோடி ஈட்டியிருந்தது.

அல்ட்ராடெக் சிமெண்ட் லாபம் 45 சதவீதம் வீழ்ச்சி.. பங்கு ஒன்றுக்கு ரூ.37 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை..
அல்ட்ராடெக் சிமெண்ட்

2021 மார்ச் காலாண்டில் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் வருவாயாக ரூ.14,405.61 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 32.27 சதவீதம் அதிகமாகும். 2021 மார்ச் காலாண்டில் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தின் விற்பனை அளவு அடிப்படையில் 28 சதவீதம் உயர்ந்துள்ளது.

அல்ட்ராடெக் சிமெண்ட் லாபம் 45 சதவீதம் வீழ்ச்சி.. பங்கு ஒன்றுக்கு ரூ.37 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை..
அல்ட்ராடெக் சிமெண்ட்

அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.37 டிவிடெண்ட வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபிறகு அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.23 சதவீதம் உயர்ந்து ரூ.6,484.80ஆக அதிகரித்தது.