அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் லாபம் ரூ.1,700 கோடி… வருவாய் 54 சதவீதம் வளர்ச்சி

 

அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் லாபம் ரூ.1,700 கோடி… வருவாய் 54 சதவீதம் வளர்ச்சி

அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.1,700.03 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமான அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.1,700.03 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 2 மடங்குக்கும் அதிகமாகும். 2020 ஜூன் காலாண்டில் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் ரூ.793.08 கோடி ஈட்டியிருந்தது.

அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் லாபம் ரூ.1,700 கோடி… வருவாய் 54 சதவீதம் வளர்ச்சி
அல்ட்ராடெக் சிமெண்ட்

2021 ஜூன் காலாண்டில் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.11,830 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 54 சதவீதம் அதிகமாகும். 2020 ஜூன் காலாண்டில் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.7,671 கோடி ஈட்டியிருந்தது.

அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் லாபம் ரூ.1,700 கோடி… வருவாய் 54 சதவீதம் வளர்ச்சி
அல்ட்ராடெக் சிமெண்ட்

அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் தனது விரிவாக்க பணிகள் திட்டமிட்டப்படி நடந்து வருவதாகவும், 2022-23ம் நிதியாண்டுக்குள் அந்த பணிகள் முடிந்து விடும் என்று எதிபார்ப்பதாக தெரவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோத அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவன பங்கின் விலை முந்தை வர்த்தக தினத்தை காட்டிலும் 0.39 சதவீதம் உயர்ந்து ரூ.7,488.95ஆக இருந்தது.