சூரிய கிரகணத்தில் தட்டின் மீது செங்குத்தாக நிற்கும் உலக்கை..ஆச்சரியத்தை ஏற்படுத்தும் பழங்கால வழக்கம்!

 

சூரிய கிரகணத்தில் தட்டின் மீது செங்குத்தாக நிற்கும் உலக்கை..ஆச்சரியத்தை ஏற்படுத்தும் பழங்கால வழக்கம்!

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரு நேர் கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் நிகழும். அதன் படி இந்த ஆண்டின் சூரிய கிரகணம் இன்று காலை 9.16 மணிக்கு தொடங்கியது. இந்த நிகழ்வின் போது சந்திரன் சூரியனின் கதிர்களை பூமியில் அடைவதைத் தடுக்கிறது. இன்று மாலை 3:04 மணிக்கு நிறைவடையும் இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பழங்கால மக்கள், சூரிய கிரகணம் தொடங்கும் போது உலக்கையை ஒரு தட்டின் மேல் வைத்து அதில் மஞ்சள் நீர் ஊற்றி நிற்க வைத்தால் அதை செங்குத்தாக நிற்க வைத்து வழிபாடு செய்வார்கள். அந்த உலக்கை சூரிய கிரகணம் முடியும் போது தானாக கீழே விழும் என்பது அவர்களது நம்பிக்கை. இந்த பழங்கால வழக்கத்தை தற்போது வரை தமிழக மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

சூரிய கிரகணத்தில் தட்டின் மீது செங்குத்தாக நிற்கும் உலக்கை..ஆச்சரியத்தை ஏற்படுத்தும் பழங்கால வழக்கம்!

அந்த வகையில் இந்த ஆண்டு சூரிய கிரகணத்தின் துவக்கத்திலும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அடுத்த கொண்டையம்பாளையம் கிராம மக்கள் தட்டில் உலக்கையை செங்குத்தாக நிற்க வைத்து வழிபாடு செய்துள்ளனர். உலக்கை செங்குத்தாக நிற்காது என்று கூறப்படும் நிலையில், கிரகணத்தின் போது தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு உலக்கை செங்குத்தாக நிற்பது வியப்பை ஏற்படுத்துகிறது. இதனை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.