“பிரிட்டன் வருபவர்கள் 14 நாட்கள் தனிமையில் வைக்கப்படுவார்கள்” – உள்துறை செயலாளர்

 

“பிரிட்டன் வருபவர்கள் 14 நாட்கள் தனிமையில் வைக்கப்படுவார்கள்” – உள்துறை செயலாளர்

லண்டன்: பிரிட்டன் நாட்டுக்கு வருபவர்கள் 14 நாட்கள் தனிமையில் வைக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு உள்துறை செயலாளர் கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 3 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 53 லட்சத்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 21 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து கொரோனா தொற்றால் அதிக பேரை பலி கொடுத்துள்ள நாடு பிரிட்டன் ஆகும். பிரிட்டனில் 36,393 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் 2 லட்சத்து 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

“பிரிட்டன் வருபவர்கள் 14 நாட்கள் தனிமையில் வைக்கப்படுவார்கள்” – உள்துறை செயலாளர்

இந்நிலையில், பிரிட்டன் நாட்டுக்கு வருகை புரிபவர்கள் 14 நாட்கள் தனிமையில் வைக்கப்படுவார்கள். அதன் பிறகு அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியான பிறகே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரிட்டன் உள்துறை செயலாளர் பிரீத்தி படேல் கூறியுள்ளார். பிரிட்டனில் கொரோனா பாதிப்பை தடுக்கும் நோக்கில் இந்த நடைமுறை அடுத்த மாதத்தில் இருந்து செயல்படுத்தப்பட உள்ளது.