மனக்கோளாறுகளிலிருந்து மீட்கும் இங்கிலாந்து மருத்துவம்!

தாயின் அரவணைப்பில் இருக்கும் குழந்தைகள் பள்ளி சென்றதும் அவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டி வளர்த்தெடுப்பவர்கள் ஆசிரியர்கள். அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்றார்கள். பெற்றோருக்கு அடுத்தபடியாக நம்பிக்கையூட்டுபவர்கள் ஆசிரியர்கள். அவர்களது நம்பிக்கை ஒளி நிறைந்த சொற்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். அது அவர்களை வாழ்க்கையில் சிறக்கச் செய்யும். ஆனால் சிலருக்கு எப்படி நம்பிக்கையூட்டினாலும் எதிர்மறையாகவே சிந்திப்பார்கள். அப்படிப்பட்டவர்களை இங்கிலாந்து மலர் மருத்துவம் மூலம் மீட்டெடுக்கலாம் என்கிறார் மலர் மருத்துவர் கௌரி தாமோதரன்.


லார்ச்:
மனம் எப்படி சிந்திக்கிறதோ அப்படியே அவர்களது செயல்பாடுகளும் அமையும். அவர்கள் எதைச்செய்தாலும் `வெற்றிபெற முடியாது, தங்களுக்கு தோல்வி உறுதி’ என்று எதிர்மறையாகவே சிந்திப்பார்கள். அத்துடன் நேரத்தை வீணாக்கி தங்கள் முன்னேற்றத்தைக் கெடுத்துக் கொள்வார்கள். எல்லாம் முடியும் என்றாலும்கூட தன்மீது சிறிதும் நம்பிக்கையற்றவர்களாக எந்த முயற்சியிலும் இறங்காமல் தோல்வியையே நம்புவார்கள்.

தன்னம்பிக்கை குறைந்த இவர்கள் தன்னால் முடியாது என்று நினைத்தாலும் தன் தலைவனால் எல்லாம் முடியும் என்று நம்புவார்கள். இத்தகையவர்கள்தான் அரசியல் கட்சித் தொண்டனாகவும், நடிகர்களை ஆராதிக்கும் ரசிகனாகவும் இருப்பார்கள். தங்களை நேசிக்கும் தலைவர்களுக்காக பிரார்த்தனை செய்வார்கள், அவர்களுக்காக பாலாபிஷேகம் செய்வார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு `லார்ச்’ (Larch)மலர் மருந்து கொடுத்தால் அவர்களிடம் மாற்றம் ஏற்படும். திறமைகள் இருந்தும் தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பவர்களுக்கும், திறமைகள் இருந்தும் தன்னால் முடியாது என்ற எண்ணத்தால் முன்னுக்கு வராமல் இருப்பவர்களுக்கும் `லார்ச்’ மருந்து நல்ல பலன் தரும்.

செஸ்ட்நட் பட்:
இதேபோல் மாணவர்களிலும் சிலர் இதேபோன்று இருப்பார்கள். அதாவது, அவர்கள் கஷ்டப்பட்டு படிப்பதைத் தவிர்த்துவிட்டு ஆசிரியருக்கு சரியாக பாடம் நடத்தத் தெரியவில்லை என்பதுபோன்ற குற்றச்சாட்டுகளை சொல்வார்கள். தட்டிக்கழித்தல் அவர்களுக்கு கைவந்த கலை. இப்படிப்பட்டவர்கள்தான் தேர்வின்போது பிட் அடிப்பது, காப்பி அடிப்பதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கும் இவர்கள்மீது மற்றவர்களுக்கு நம்பிக்கை குறைந்துவிடும். பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல்போனால், சில பித்தலாட்டங்களைச் செய்வார்கள். சில நேரம் பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க தற்கொலை செய்யவும் தயங்கமாட்டார்கள். இத்தகையவர்களுக்கு `செஸ்ட்நட் பட்’ (Chestnut Bud) என்ற மலர் மருந்து கொடுத்தால் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

அதேபோல் மனிதர்கள் பலவிதம்… மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார்கள். அப்போது தன் பேச்சைக்கேட்டுக்கொண்டிருப்பவர் ஏதாவது பேசினாலும்கூட அவரை பேசவிடாமல் தன் பேச்சை அவர் கேட்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். இன்றைய சூழலில் செல்போனில் மணிக்கணக்கில் பேசும் நபர்கள். எதிர்முனையில் உள்ளவர் காதில் ரத்தம் வழியும் அளவுக்கு பேசிக்கொண்டிருப்பார்கள். வரைமுறையில்லாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள். அதிலும் சிலர் மற்றவர்களை கேட்கத்தூண்டும்விதமாக நயமாகப் பேசுவார்கள்.

ஹீத்தர்:
இப்படி அதிகம் பேசுவர்களின் செயல்பாடுகள் நேர் எதிர்மாறாக இருக்கும். வாய்ச்சொல்லில் வீரர்களான அவர்களுக்கு மண்ணீரல் அழற்சி நோய் ஏற்படலாம். இவர்கள் சாப்பிடும்போதுகூட பேசிக்கொண்டே இருப்பதால் விக்கல் உண்டாகும். விக்கலைப்போக்க அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் இவர்களது மண்ணீரல் செரிமான நொதிகள் நீர்த்து மாவுச்சத்தை செரிமானம் செய்வதில் கோளாறுகள் ஏற்படும். இப்படிப்பட்டவர்களுக்கு `ஹீத்தர்’ (Heather) என்ற மலர் மருந்து கொடுத்தால் அவர்கள் நல்ல மாற்றத்தை உணர்வார்கள்.

இப்படியாக மனிதர்களின் மனநிலையில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கும் மலர் மருத்துவத்தில் தீர்வுகள் இருக்கின்றன.

Most Popular

பக்ரித் பண்டிகை கொண்டாட ஊருக்கு சென்ற ராணுவ வீரர் மாயம்… தேடுதல் பணி தீவிரம்!

பக்ரீத் பண்டிகை தினத்தை கொண்டாடுவதற்காக ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்திற்கு சென்ற 162-வது பட்டாலியன் படை பிரிவை சேர்ந்த ரைபிள்மென் ஒருவர் மாலை 5 மணி முதல் காணாமல் போயுள்ளார். காணாமல் போன...

நாய்க்குட்டிக்கும் மாஸ்க் அணிவித்த சிறுவன்… இதயங்களை வென்ற செயல்!

அரசாங்கம் மக்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுமாறு தொடர்ந்து வலுயுறுத்தி வருகிறது. பெரும்பாலான மக்கள் அதை கடைபிடிப்பதில்லை. ஆனால் சிறுவன் ஒருவன் தான் மாஸ்க் அணிந்துள்ளது மட்டுமில்லாமல் தனது மாஸ்க் அணிவித்து...

ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகையில் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ராஜ்பவனில் நடைபெற இருந்த சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான...

இன்று 5,609 பேருக்கு கொரோனா… இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பட்சமாக 109 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று 58,211 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,609 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.63 லட்சத்தைக் கடந்துள்ளது. பரிசோதனை செய்யப்படுவோர்கள் மற்றும்...