‘புதிய கல்விக் கொள்கையை விரைந்து அமல்படுத்த வேண்டும்’- யுஜிசி கடிதம்

 

‘புதிய கல்விக் கொள்கையை விரைந்து அமல்படுத்த வேண்டும்’- யுஜிசி கடிதம்

தேசிய கல்விக் கொள்கையை விரைந்து அமல்படுத்துமாறு யுஜிசி பல்கலைக் கழகங்களுக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.

மத்திய அரசு அண்மையில், புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தது. 39 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தி அமைக்கப்படும் இந்த கல்விக் கொள்கை, கல்விப் பாதையில் புரட்சியை உண்டாக்கும் என பிரதமர் மோடி தொடர்ந்து வெளியுறுத்தி வருகிறார். இந்த கல்விக் கொள்கை மும்மொழி கொள்கையை வலியுறுத்துவதால், தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது. இதனால் இது குறித்து ஆராய குழு ஒன்றை அமைத்த முதல்வர் பழனிசாமி, அந்த குழுவின் பரிந்துரையின் பேரிலேயே முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.

‘புதிய கல்விக் கொள்கையை விரைந்து அமல்படுத்த வேண்டும்’- யுஜிசி கடிதம்

இதனிடையே கல்விக் கொள்கையை விரைந்து அமல்படுத்த வேண்டும் என யுஜிசி பல்கலைக்கழகங்களுக்கு கடிதம் எழுதியிருந்தது. இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக இணையவழி கருத்தரங்கை நடத்தி விரைந்து அமல்படுத்த வேண்டும் என யுஜிசி மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. மேலும், நவம்பர் 16ம் தேதிக்குள் இணையவழி கருத்தரங்கை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.