ஒரே சமயத்தில் 2 பட்டப் படிப்புகளை தொடரலாம் – பல்கலைக்கழக மானிய ஆணையம்

 

ஒரே சமயத்தில் 2 பட்டப் படிப்புகளை தொடரலாம் – பல்கலைக்கழக மானிய ஆணையம்

டெல்லி: ஒரே சமயத்தில் 2 பட்டப் படிப்புகளை தொடரலாம் என பல்கலைக்கழக மானிய ஆணையம் அறிவித்துள்ளது.

ஒரு பல்கலைக்கழகத்தில் முழுநேரமாக பட்டப் படிப்பு படிக்கும் அதே சமயத்தில், அதே பல்கலைக்கழகம் அல்லது வேறொரு பல்கலைக்கழகத்தில் தொலைதூரை கல்வி அல்லது ஆன்லைன் மூலமாக மற்றொரு பட்டப் படிப்பை மாணவர்கள் படிக்கலாம் என்று பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) அறிவித்துள்ளது.

ஒரே சமயத்தில் 2 பட்டப் படிப்புகளை தொடரலாம் – பல்கலைக்கழக மானிய ஆணையம்

ஆனால், இந்த விவகாரத்தை ஆணையம் ஆராய்வது இது முதன்முறை அல்ல. ஏற்கனவே யுஜிசி 2012-ஆம் ஆண்டில் ஒரு குழுவை இதற்காக அமைத்தது. ஆனால் இறுதியில் இந்த யோசனை கைவிடப்பட்டது. ஒரே சமயத்தில் 2 பட்டப் படிப்புகளை மாணவர்கள் படிப்பதன் மூலம் 3 ஆண்டுகளில் இரண்டு பட்டப் படிப்பு சான்றிதழ்களை அவர்கள் பெற முடியும். அத்துடன் பட்டப்படிப்புடன் சேர்த்து திறன் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான படிப்புகளை மாணவர்கள் தேர்ந்தெடுத்து படிப்பதற்கும் இந்த முறை உதவியாக இருக்கும் என யுஜிசி கூறியுள்ளது.