ஆக.31-க்குள் கல்லூரிகளில் இறுதித் தேர்வை நடத்தி முடிக்க யுஜிசி உத்தரவு

 

ஆக.31-க்குள் கல்லூரிகளில் இறுதித் தேர்வை நடத்தி முடிக்க யுஜிசி உத்தரவு

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இரண்டாம் அலை தொடங்குவதற்கு முன் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. அச்சமயம் மாணவர்களுக்கு கொரோனா, ஆசிரியர்களுக்கு கொரோனா போன்ற பல சிக்கல்கள் எழுந்ததால் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன. இரண்டாம் அலை பள்ளிகளை திறக்க முடியாத சூழல் நிலவுவதால், நடப்புக் கல்வியாண்டுக்கான வகுப்புகளும் ஆன்லைன் முறையிலேயே தொடருகின்றன.

ஆக.31-க்குள் கல்லூரிகளில் இறுதித் தேர்வை நடத்தி முடிக்க யுஜிசி உத்தரவு

இந்நிலையில் நாடு முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் ஆகஸ்ட் 31 அம் தேதிக்குள் இறுதி தேர்வை நடத்தி முடிக்குமாறு பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அடுத்த கல்வியாண்டு தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2021-22 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகளின் முதலாம் ஆண்டு சேர்க்கை செப்டம்பர் 30 க்குள் அனைத்து கல்வி நிறுவனங்களும் முடித்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கல்லூரிகள், பல்கலைகழங்களின் புதிய கல்வி ஆண்டு அக்டோபர் 1 முதல் தொடங்கும்.