தொடர்ந்து 3ஆவது முறையாக முக்கிய தேர்வு ஒத்திவைப்பு!

 

தொடர்ந்து 3ஆவது முறையாக முக்கிய தேர்வு ஒத்திவைப்பு!

இந்தியா மீண்டும் கொரோனாவின் பிடியில் சிக்கிக் கொண்டுவிட்டது. இரண்டாவது அலை அதி தீவிரமாகப் பரவி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு, புதிய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தலைநகர் டெல்லியில் ஒரு வார காலம் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது.

தொடர்ந்து 3ஆவது முறையாக முக்கிய தேர்வு ஒத்திவைப்பு!

அதேபோல தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. திருமணம், இறுதிச் சடங்கு, திருவிழா என பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. கூடவே நுழைவுத் தேர்வு, பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு என அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 12ஆம் வகுப்பு தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன. அடுத்ததாக ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் நெட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பால் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடத்தப்படும் 15 நாட்களுக்கு முன்னர் அடுத்த தேர்வு தேதி அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.