“சகோதரத்துவத்தை வளர்க்கும் உகாதி திருநாள்” ராமதாஸ், தினகரன் வாழ்த்து!

 

“சகோதரத்துவத்தை வளர்க்கும் உகாதி திருநாள்” ராமதாஸ், தினகரன் வாழ்த்து!

தெலுங்கு, கன்னட புத்தாண்டான உகாதி திருநாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு தினம் இன்று உகாதி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது இப்பண்டிகையின் போது மக்கள் வீடுகளை சுத்தம் செய்து, அலங்கரித்து புத்தாடை உடுத்தி, உற்சாகமாகக் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு வந்தாரை வாழ வைக்கும் நல்ல நாடு. அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சகோதரர்களாக வாழும் மாநிலம் தமிழ்நாடு தான். யாதும் ஊரே… யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடலுக்கு ஏற்ப தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களை தமிழக மக்கள் தங்களின் சகோதரர்களாகவே பார்க்கின்றனர். தெலுங்கு & கன்னட மக்கள் அனைத்து வசதிகளுடனும், சுதந்திரமாகவும் வாழ தமிழகம் வகை செய்துள்ள அதேநேரத்தில், தமிழகத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் பெருமளவில் பங்களித்துள்ளனர். தமிழர்களுடன் மொழியால் வேறுபட்டிருந்தாலும் அவர்கள் உணர்வால் தமிழர்களின் சகோதரர்களாகவே வாழ்கின்றனர். அவர்களையும் சகோதரர்களாகவே தமிழர்கள் பார்க்கின்றனர்.

“சகோதரத்துவத்தை வளர்க்கும் உகாதி திருநாள்” ராமதாஸ், தினகரன் வாழ்த்து!

தமிழர்களுக்கும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஆல்போல் தழைத்தோங்க வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழகத்தின் வளர்ச்சியை உறுதி செய்வதிலும், நாட்டையும், மாநிலத்தையும் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் நடைபோடச் செய்வதிலும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் சகோதர, சகோதரிகளுக்கும் பங்கு உண்டு. மொத்தத்தில் தமிழ்நாட்டில் உகாதித் திருநாள் சகோதரத்துவத்தை வளர்க்கும் திருநாள் ஆகும். இந்தத் திருநாளைக் கொண்டாடும் சகோதரர்கள் அனைவருக்கும் எனது உகாதி திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய யுகாதி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மதம், இனம், மொழி, கலாச்சாரம், பண்பாடு எல்லாவற்றையும் கடந்து எல்லோரையும் அரவணைத்து அன்பு பாராட்டுவதில் தமிழகம் இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது. தமிழகத்தில் வசிக்கும் அனைவரிடமும் பாசம் காட்டிய நம் அன்புத்தாய் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் அவர்களது திருப்பெயரை தாங்கியிருக்கும் நம்முடைய இயக்கமும் அவ்வாறே செயல்பட்டு வருகிறது.

“சகோதரத்துவத்தை வளர்க்கும் உகாதி திருநாள்” ராமதாஸ், தினகரன் வாழ்த்து!


எத்தனையோ நூற்றாண்டுகளாக தமிழக மக்களோடு இரண்டற கலந்து அவர்களின் இன்ப, துன்பங்களில் பங்கேற்று, தமிழகத்தில் கல்வி, கலை, தொழில், வணிகம் உள்ளிட்டவற்றில் பெரும் பங்களிப்பைச் செலுத்தி வருகிற தெலுங்கு மற்றும் கன்னட சகோதர, சகோதரிகளுக்கு யுகாதி புத்தாண்டில் புதுப்புது வெற்றிகள் குவியவும் ஆரோக்கியம் நிறைந்திருக்கவும் வாழ்த்துகிறேன். இந்தப் புத்தாண்டில் உலக மக்கள் அனைவரும் கொரோனா பாதிப்பில் இருந்து முற்றிலுமாக விடுபட்டிட எல்லாம் வல்ல இறைவனை வழிபடுவோம்” என்று கூறியுள்ளார்.