உடுமலை சங்கர் கொலை : தந்தை சின்னசாமி பதில் தர நோட்டீஸ்!

 

உடுமலை சங்கர் கொலை : தந்தை சின்னசாமி பதில் தர நோட்டீஸ்!

உடுமலைப்பேட்டை சங்கர் மற்றும் கவுசல்யா ஜோடி சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட நிலையில் கௌசல்யாவின் குடும்பத்தினர் அவர்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். இதன் எதிரொலியாக கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி கவுசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார்.

உடுமலை சங்கர் கொலை : தந்தை சின்னசாமி பதில் தர நோட்டீஸ்!

இதுதொடர்பான வழக்கை விசாரித்த, திருப்பூர் நீதிமன்றம், கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை விதித்தது. மேலும் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் மேல்முறையீட்டை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் 22-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பில் உடுமலை சங்கர் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து, மீதமுள்ள ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இத்தீர்ப்புக்கு எதிராக சங்கரின் சகோதரர் விக்னேஸ்வரனும், தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர்.

உடுமலை சங்கர் கொலை : தந்தை சின்னசாமி பதில் தர நோட்டீஸ்!

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “வழக்கு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் மேல்முறையீட்டு மனுக்கள் மீது பதிலளிக்க வேண்டும் என்று கூறி கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஒத்தி வைத்தனர்.