உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கு: 5 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு.. கவுசல்யாவின் தந்தை விடுவிப்பு!

உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கு: 5 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு.. கவுசல்யாவின் தந்தை விடுவிப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குமரலிங்கம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரும் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கவுசல்யாவும் காதலித்து வந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத கவுசல்யாவின் உறவினர்கள் கடந்த 2016 மார்ச் 13-ம் தேதி உடுமலையில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கவுசல்யாவின் உறவினர்கள் தான் சங்கரை கொலை செய்தது தெரிய வந்தது.

உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கு: 5 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு.. கவுசல்யாவின் தந்தை விடுவிப்பு!

அதனால் கவுசல்யாவின் பெற்றோர் தாய்மாமன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனையும் அவரது தாய்மாமன் மற்றும் உறவினர் உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்து உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து அவர்களின் தூக்குத்தண்டனையை உறுதி செய்யும் நடைமுறை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கு: 5 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு.. கவுசல்யாவின் தந்தை விடுவிப்பு!

இதனிடையே அவர்கள் 3 பேரும் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து காவல்துறையினர் தரப்பிலும், தூக்குத்தண்டனையை எதிர்த்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமியும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த நிலையில் இன்று அந்த அனைத்து வழக்குகளுக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கவுசல்யாவின் தந்தையை விடுதலை செய்தும் மற்ற ஐந்து பேரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதே போல இந்த வழக்கில் 3 பேர் முன்னதாக விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர்களின் விடுதலை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், ஒருவருக்கு விதித்த ஆயுள் தண்டனையையும் மற்ற ஒருவருக்கு விதித்த 5 ஆண்டுகள் சிறை தண்டனையையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

,