அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

 

அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 55 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில், அமராவதி அணையின் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

அதனை ஏற்று, இன்று முதல் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனையொட்டி நடந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு, தண்ணீரை திறந்து வைத்தார்.

தண்ணீர் திறப்பின் மூலம், பழைய ஆயக்கட்டிற்குட்பட்ட 6 ராஜ வாய்க்கால்கள் மூலம் பாசனம் பெறும் 4 ஆயிரத்து 686 ஏக்கர் நிலம் பயனடையும். 135 நாட்களுக்கு இடைவெளி விட்டு 1,728 மில்லியன் கனஅடி நீர் திறந்து விடப்பட உள்ளது. இதனிடையே, விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர்மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டார்.