நிலவுக்கு செல்லும் பொருட்களை கட்டுப்படுத்த முடியும் என்றால் ஏன் ஈ.வி.எம்.களை ஹேக் செய்ய முடியாது? காங்கிரஸ்

நிலவுக்கு செல்லும் பொருட்களை கட்டுப்படுத்த முடியும் என்றால் ஏன் ஈ.வி.எம்.களை ஹேக் செய்ய முடியாது? காங்கிரஸ்

செவ்வாய் மற்றும் சந்திரன் நோக்கி செல்லும் பொருட்களை பூமியிலிருந்து கட்டுப்படுத்த முடியும் என்றால் ஏன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உதித் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பீகார் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் 10 மாநிலங்களில் மொத்தம் 54 தொகுதிகளில் நடந்து முடிந்த இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. பீகார் சட்டப்பேரவை தேர்தல், மத்திய பிரதேசம், குஜராத், உத்தர பிரதேசம் மற்றும் தெலங்கானா இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோதே பா.ஜ.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர். இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உதித் ராஜ், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யலாம் டிவிட் செய்து இருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

நிலவுக்கு செல்லும் பொருட்களை கட்டுப்படுத்த முடியும் என்றால் ஏன் ஈ.வி.எம்.களை ஹேக் செய்ய முடியாது? காங்கிரஸ்
உதித் ராஜ்

உதித் ராஜ் டிவிட்டரில், செவ்வாய் மற்றும் சந்திரன் நோக்கி செல்லும் பொருட்களை பூமியிலிருந்து கட்டுப்படுத்த முடியும் என்றால் ஏன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது? அமெரிக்காவில் மின்னணு வாக்குப்பதிவு மூலம் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் அங்கு டிரம்ப் தோல்வி அடைய சாத்தியம் உள்ளதா? என பதிவு செய்து இருந்தார்.

நிலவுக்கு செல்லும் பொருட்களை கட்டுப்படுத்த முடியும் என்றால் ஏன் ஈ.வி.எம்.களை ஹேக் செய்ய முடியாது? காங்கிரஸ்
டிரம்ப்

டிவிட்டரில் கருத்து தெரிவித்தது தொடர்பாக செய்தியாளர்கள் நேரடியாக உதித் ராஜிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது: காங்கிரஸ் வென்றாலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த கூடாது. சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் செயற்கைகோளை தரையிலிருந்து இருந்து கட்டுப்படுத்த முடியுமானால், அவர்களுக்கு மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எம்மாத்திரம்? அண்மையில் ஹரியானா தேர்தல்களின்போது, சில இளைஞர்கள் புளூடூத் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக்கிங் செய்தார்கள். பீகார் தேர்தலுக்காக மட்டுமல்ல அனைத்து தேர்தல்களுக்காகவும் இதை சொல்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.