2 மணி தேர்வுக்குக் காலை 11-க்கே வந்துவிட வேண்டும்… நீட் தேர்வுக்கு உதயநிதி கண்டனம்

 

2 மணி தேர்வுக்குக் காலை 11-க்கே வந்துவிட வேண்டும்… நீட் தேர்வுக்கு உதயநிதி கண்டனம்

மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மத்திய அரசு தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. இதன் காரணமாக நீட் தேர்வானது இன்று மதியம் 2 மணிக்கு நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இந்த தேர்வை தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். 2 மணிக்கு நடைபெறவிருந்த தேர்வுக்கு காலை 11 மணிமுதல் மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “2 மணி தேர்வுக்குக் காலை 11-க்கே வந்துவிட வேண்டும். மதிய உணவு இல்லை. தமிழ் அறிவிப்பு இல்லை. கையுறைகூட குறிப்பிட்ட நிறத்தில். வெயிலில் பெற்றோர்-கழிப்பறை வசதியில்லை. நம் பிள்ளைகள் பாஸாகி விடக்கூடாது எனும் சூழ்ச்சியே இன்றைய நீட் தேர்வு கெடுபிடிக்கான காரணம். #BanNeet_SaveTNStudents” என பதிவிட்டுள்ளார்.