அமித்ஷாவை கொள்ளையன் என விமர்சித்த உதயநிதி!

 

அமித்ஷாவை கொள்ளையன் என விமர்சித்த உதயநிதி!

திருவாரூரில் நடைபெற்ற பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மற்றும் சமூக அமைப்பினர் ஆகியோருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “”விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” பிரச்சார பயணத்திற்கு கூடுதல் விளம்பரம் வாங்கித் தந்தது எடப்பாடியும் காவல்துறையும் தான் ஆயிரக்கணக்கான போலீஸாரை குவித்து தீவிரவாதி போல் நடத்தினார்கள், பிரச்சாரம் செய்யக்கூடாது என்று காவல்துறை என்னிடம் கெஞ்சியது. அமைச்சா் நடந்து சென்றபோது கொரோணா பரவல் இல்லையா என்று காவல்துறையிடம் நான் கேட்டபோது, அது அவர்கள் கூட்டிய கூட்டம் உங்களுக்கு தானாக கூட்டம் வருகிறது என்றார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் திருவாரூரில் சட்டக் கல்லூரி அமைப்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசி முடிவெடுக்கப்படும். ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படவில்லை. நீட் தேர்வு பயத்தால் இதுவரை 15 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டப்போராட்டம் நடத்தி நீட் தேர்வு தமிழகத்தில் இல்லாமல் செய்வோம். பாஜக கூட்டணிக் கட்சிகள் கூட வேளாண் திருத்த சட்ட மசோதாக்களை எதிர்த்து பதவி விலகி உள்ளன. ஆனால் அதிமுக அரசு ஆதரவு தெரிவித்து வருகிறது. விமான சேவை, ரயில் சேவையை தொடர்ந்து வேளாண்மையிலும் கார்ப்பரேட் நிறுவனங்களை புகுத்த பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

அமித்ஷாவை கொள்ளையன் என விமர்சித்த உதயநிதி!

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணிக்கு மக்களாகிய நீங்கள் தண்டனை கொடுத்து விட்டீர்கள். இதேபோல் சட்டமன்றத் தேர்தலில் தண்டனை கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஜெயலலிதா இறந்த போது இறப்பில் மர்மம் உள்ளது என முதலில் கூறியவர் ஓபிஎஸ். அதன்பிறகு துணை முதல்வர் பதவி கிடைத்ததும் அமைதியாகிவிட்டார். இதற்கு காரணம் என்னவெனில் ஜெயலலிதா மரணத்திற்கு ஓ பன்னீர் செல்வமும் உடந்தை. அதிமுக பாஜக கூட்டணி அமையாது என நினைத்திருந்தோம் ஆனால் அமித்ஷா தமிழகம் வந்து கூட்டணியை உறுதி செய்துவிட்டார்.

ஒரு வீட்டில் 2 கொள்ளையர்கள் நுழைகிறார்கள், வீட்டில் உள்ளவர்கள் எழுந்தவுடன் முன்வாசல் வழியாக ஒரு கொள்ளையனும் பின்வாசல் வழியாக மற்றொரு கொள்ளையனும் ஓட யாரைப் பிடிப்பது என தெரியாமல் நிற்பார்கள், ஆனால் இப்போது அதிமுக பாஜக என இரண்டு கொள்ளையர்களும் ஒரே வாசல் வழியாகத் தான் வரப்போகிறார்கள் என தெரிந்து விட்டது வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.” எனக் கூறினார்.