கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தி பிரச்சாரத்தை தொடங்கினார் உதயநிதி!

 

கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தி பிரச்சாரத்தை தொடங்கினார் உதயநிதி!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, நாளை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தி பிரச்சாரத்தை தொடங்கினார் உதயநிதி!

சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “நாளை முதல் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ளேன். கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளையில் இருந்து தொடங்குகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக மக்களுக்கு செய்த துரோகம் மற்றும் ஊழலை மக்களிடம் கொண்டு செல்வேன்.அதே போல மறைந்த கருணாநிதி அவர்கள் கொண்டு வந்த திட்டங்களுக்கு போட்ட முட்டுக்கட்டையையும் மக்களிடம் கொண்டு செல்வேன். மக்களிடம் பேசி அவர்களின் கருத்தையும் கேட்க இருக்கிறேன்.

பாஜக, அதிமுக ஒன்றாகத்தான் பார்க்கிறோம். பாஜக கொண்டு வரும் மக்களுக்கு எதிரான திட்டங்களை அதிமுக ஆதரிப்பதால், மக்கள் அவர்கள் மீது கோபமாக இருக்கிறார்கள். ஆகையால் இந்த பிரச்சார பயணமும் சிறப்பாக அமையும்” எனக் கூறினார்.

சுமார் 100 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உதயநிதி ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். முதற்கட்டமாக நாகை, தஞ்சாவூர், திருவாரூரில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்.