திமுகவிற்கு ஓட்டு கேட்டால் கைது செய்வோம் என காவல்துறையினர் கூறினர்- உதய்நிதி ஸ்டாலின்

 

திமுகவிற்கு ஓட்டு கேட்டால் கைது செய்வோம் என காவல்துறையினர் கூறினர்- உதய்நிதி ஸ்டாலின்

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’என்ற தலைப்பில், தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் உதய்நிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக திருச்சி திருவெறும்பூர் பெல் வளாகத்தில் உள்ள தொழிலாளர் முன்னேற்ற சங்க அலுவலகத்தில், டில்லி செங்கோட்டை வடிவில் அமைக்கப்பட்டிருந்த அரங்கத்தில், உதய்நிதி ஸ்டாலின் தொழிலாளர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது பேசிய அவர், “திமுகவிற்கு ஓட்டு கேட்டால் கைது செய்வோம் என காவல்துறையினர் கூறியதற்கு எதிராக பிரச்சாரம் செய்தேன். என்னை கைது செய்தார்கள். மீண்டும் மீண்டும் கைது செய்தனர். தொடர்ந்து விடுவித்தவுடன் பிரச்சாரம் செய்துவருகிறேன். எங்கள் பிரச்சாரம் பிரபலம் அடைய காரணமான எடப்பாடி பழனிசாமிக்கும், காவல் துறையினருக்கும் நன்றி. செல்லும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு மக்கள் மத்தியில் உற்சாகமான வரவேற்பு கிடைக்கிறது. மக்களிடம் எழுச்சியை பார்த்து வருகிறேன். இதே எழுச்சியுடன் 234 தொகுதியிலும் வெற்றியை பெற்றுத்தர வேண்டும்.

திமுகவிற்கு ஓட்டு கேட்டால் கைது செய்வோம் என காவல்துறையினர் கூறினர்- உதய்நிதி ஸ்டாலின்

தமிழகத்தில் இரண்டு அடிமைகளை வைத்துக்கொண்டு பாஜக ஆட்சி நடத்துகிறது. மக்களை கொள்ளையடித்து நிறைய வைத்துள்ளனர். இன்னும் 4 மாதங்கள் காத்திருந்து, இந்த கொள்ளைக் கும்பலை வீழ்த்த வேண்டும். திமுகவிற்கான வாக்காளர்களது எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அனைத்து தொகுதியிலும் முத்தமிழறிஞர் கலைஞர் போட்டியிடுகிறார் என்ற நினைப்புடன் அனைவரும் உழைக்கவேண்டும். சாமானிய மக்களுக்கான அரசு என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழக எடப்பாடி அரசிடம் இருந்து பெல் நிறுவனத்துக்கு வர வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 4,000 கோடி, ராமநாதபுரம் மாவட்டத்தில் பிஎச்இஎல் நிறுவனம் பெற்றுள்ள ரூபாய் 5,500 கோடி மதிப்பிலான uper power projet தமிழக அரசின் அலட்சியத்தால் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் வருடக் கணக்கில் கிடப்பில் உள்ளது. அதனையும் திமுக ஆட்சி அமைந்தவுடன் பெற்றுத் தருவோம்” என்று பேசினார்.