காலைப் பிடிப்பதுதான் கோட்டைக்கான வழி என கூவத்தூர் வழியாக புது ரூட் பிடித்தவரெல்லாம் மக்கள் வலியை உணரமுடியாது- உதயநிதி ஸ்டாலின்

 

காலைப் பிடிப்பதுதான் கோட்டைக்கான வழி என கூவத்தூர் வழியாக புது ரூட் பிடித்தவரெல்லாம் மக்கள் வலியை உணரமுடியாது- உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூன் 25ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் கட்டுக்குள் வருவதற்கு தேர்வு நடத்துவது நோய் தொற்றை அதிகரிக்கும் என இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், பொது மக்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள திமுக இளைஞரணி தலைவர் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கே அவர்களின் வலி, வேதனையை உணரமுடியும் என்பதற்கு தெலங்கான முதல்வர் அவர்களே உதாரணம். ஆனால் காலைப் பிடிப்பதுதான் கோட்டைக்கான வழி என கூவத்தூர் வழியாக புது ரூட் பிடித்தவர்களுக்கெல்லாம் அவற்றை உணரமுடியாது என்பதற்கு தமிழக முதலமைச்சரேசான்று” எனக்குறிப்பிட்டுள்ளார்.